முதலில் தூக்க மாத்திரை, பின்பு மண்ணெண்ணெய் – எங்கே ரோகினி?
சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருடைய கணவர் இறந்துவிட்டார். 3 குழந்தைகளுடன் நீண்ட நாட்களாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
திடிரென வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்பதாகக் கூறி காலி செய்யச் சொல்லியுள்ளார். பூங்கொடியே, அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாகக் கூறி உள்ளார்.
முதல் தவணையாக எட்டரை லட்சம் ரூபாய்யை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். மீதத்தொகையை சிலநாட்களில் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
ஆனால் சில நாட்கள் கழிந்த உடன் வேறு ஒருவருக்கு வீட்டை விற்றுவிட்டார் அதன் உரிமையாளர்.
பாதிக்கப்பட்ட பூங்கொடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளார்.எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, தூக்கமாத்திரையை விழுங்கிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை.
இறுதியாக மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த காவலர்கள் உடனே பூங்கொடியின் மீது தண்ணீரை ஊற்றி அனைத்து விட்டனர்.
ஏழை எளிய மக்களுக்கு உதவுவது, நலத்திட்டங்கள் செய்வது என அவ்வபோது மீடியாக்களில் வலம்வந்த சேலம் கலெக்டர் ரோகினி எங்கே போனார்?
இத்தனை முறை ஒரு பெண், கலெக்டர் அலுவலகத்தில் உயிர்விட முயற்ச்சி செய்தது ரோகினியின் காதுகளுக்கு எட்டவில்லையா?