Home நிகழ்வுகள் தமிழகம் தமிழக முதல்வர் மக்களிடம் இன்று இரவு பேசுகிறார்

தமிழக முதல்வர் மக்களிடம் இன்று இரவு பேசுகிறார்

683
0
தலைப்பு செய்திகள்

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.

கொரோனா வைரஸ் இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் படிப்படியாக வைரஸ் தாக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் நேற்று இரவு தொலைக்காட்சியில் மக்கள் முன்பு தோன்றிய பாரத பிரதமர் மோடி, 21 நாட்கள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

மக்கள் தங்களைத் தாங்களே வீட்டினுள்ளேயே பாதுகாத்துக்கொள்ளவும், சமூக விலகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து 144 தடை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியாவில் முன்னோடியாக தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.

பிரதமர் மோடி பாராட்டும் அளவிற்கு நம்முடைய சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் இன்று இரவு 7 மணிக்கு நம் மாநிலத்தின் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்கள் முன்பு தொலைக்காட்சியில் பேச இருக்கிறார்.

மக்களுக்கு முன்னெச்சரிக்கை பற்றியும், கொரோனா தடுப்பு பற்றியும், வருமுன் காப்போம் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்!
Next articlePornhub: பார்ன் ஹப் பிரீமியம் சேவை இலவசம் 50000, மாஸ்க் தானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here