ஆம்புலன்ஸ் உள்ளே கொரோனா நோயாளி; தெறித்த புள்ளிங்கோ – கதற வைத்த திருப்பூர் போலீஸ். நூதனமாக கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்.
திருப்பூர் காவல்துறை கொரோனா நோயை பற்றி சட்டை செய்யாமல் வெளியில் சுற்றுவோருக்கு அதன் தீவிரத்தை உணர்த்த முடிவு செய்தனர்.
அவர்கள் விழிப்புணர்வு செய்ய சாலை ஓரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைத்தனர். அதற்குள் ஒரு கொரோனா நோயாளி ஒருவர் உள்ளது போல் செட்டப் செய்து இருந்தனர்.
போலீஸ் நிற்பதை அறியாமல் மூன்று புள்ளிங்கோ ஒரே பைக்கில் லட்டாக போலீசிடம் சிக்கினர். அவர்களை முதலில் விசாரித்தனர் போலீஸ்.
அப்போதும் கூட புள்ளிங்கோ பெரிய அளவில் அலட்டாமல் பம்மியவாறு பதில் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
உடனே போலீஸ் உயர் அதிகாரி இவனுங்க திருந்த மாட்டானுங்க இவனுங்கள கொரோன பேசன்ட் இருக்குற வண்டிக்குள்ள ஏத்துங்க அப்போதான் திருந்துவானுங்க எனக் கூறினார்.
ஆம்புலன்ஸ் கதைவைத் திறந்ததும் உள்ளே இருந்த நபர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அதைப் பார்த்ததும் புள்ளிங்கோ தெறித்து ஓடினர்.
அவர்களை கொத்தாக வண்டிக்குள் தள்ளி போலீசார் கதவை சாத்தினார். உள்ளே சென்ற புள்ளிங்கோ மரண பயத்தில் கூக்குரல் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
எனக்கெல்லாம் கொரோனா வருமா? என வீராப்பாக சுற்றித் திரியும் இதுபோன்ற புள்ளிங்கோ இப்படித்தான் நோயாளியைப் பார்த்தா நடுங்குவார்கள் என்பற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.



