Home தொழில்நுட்பம் வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய இனி கைரேகை தேவை!

வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய இனி கைரேகை தேவை!

717
0
வாட்ஸ்ஆப்பை ஓபன்

வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய இனி கைரேகை தேவை!

வாட்ஸ்ஆப் செயலியில் கூடிய விரைவில் கைரேகை பூட்டு (Fingerprint Lock) அம்சம் வரப்போவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தகவல்களை எளிதாக பாதுகாக்க இயலும். ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் முதலில் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் உடனடித் தகவல் அனுப்பும் செயலி வாட்ஸ்ஆப் ஆகும்.

தற்பொழுது பேஸ்புக்கு சொந்தமான இந்த செயலியில் 100 கோடி பயனாளர்கள் இருக்கின்றனர்.

பெரும்பாலான வாட்ஸ்ஆப் பயனாளர்கள் லாக் செய்வதற்கு  மூன்றாம் பார்ட்டி செயலிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அம்சமானது இனி உங்கள் செயலியிலயே வழங்கப்படும். இதன் மூலம் எளிதாக உங்கள் அனைத்து தகவல்களையும் பாதுகாக்க இயலும்.

வாட்ஸ்ஆப் பீட்டா ஆண்ட்ராய்ட் 2.19.3 

வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்கள் மட்டுமே இப்போதைக்கு இந்த அம்சத்தை பயன்படுத்த இயலும்.

உங்களுடைய ப்ரைவசி செட்டிங்கில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய இயலும். உங்களுடைய கைரேகயை உங்கள் போன் லாக்கிற்கு செட் செய்ததுபோல் செட் செய்யவேண்டும்.

ஆப்பிள் போன்களில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்கள், டச் மற்றும் முக ஐடி (face lock) கொண்டு லாக் மற்றும் அன்லாக் செய்ய இயலும்.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த இந்த அம்சம் கொண்டு வந்ததாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here