குறித்த நேரத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். கொரோனா வைரசால் போட்டிகள் தடைபடாது என ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி உறுதி செய்த நாளில் நிச்சயம் நடக்கும். இதில் மாற்றம் செய்ய வாய்ப்பேதும் இருக்காது எனக் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் ஷின்சோ அபே அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறிய விவரங்கள் பின்வருமாறு:-
“கொரனோ வைரஸைக் கண்டு உலக நாடுகளும், அந்நாடுகளில் உள்ள துறைகள் எல்லாம் அச்சம் கொள்கின்றன. இதில் விளையாட்டுத் துறையும் விதி விலக்கல்ல.
ஆனாலும், இந்த கொரோனோ வைரஸைக் கண்டு பீதி கொள்ள வேண்டாம் என்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்திப்போட்டு நடத்தவோ அல்லது ரத்து செய்யும் எண்ணமோ கிடையாது என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை குறைந்தது 1 வருடத்திற்காவது ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.