அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.8 ஆகப் பதிவு
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கடலின் மையப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை வரை அதன் தாக்கம் உணரப்பட்டது.
தற்பொழுது அந்தமான் நிகோபார் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 எனப் பதிவாகியுள்ளது.
அந்தமான் தீவு அருகில் 78 கி.மீ. தொலைவில் 6.44 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நில அதிர்வால் அங்கு வசித்த மக்கள் முதலில் பீதி அடைந்தனர். லேசான நிலநடுக்கம் என்பதால் சற்று நிம்மதி அடைந்தனர்.