ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம்; நாடு திரும்ப விருப்பம்
ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்வதற்காக 2015- ஆம் ஆண்டு லண்டனில் இருந்து, பதினைந்து வயதுடைய மூன்று பள்ளி மாணவிகள் தப்பிச்சென்றனர்.
கிரீன் அகாடமி பள்ளியில் பயின்ற ஷமீமா பேகம், அமீரா அபேஸ் கதீசா சுல்தானா ஆகிய மூவரும் துருக்கியின் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிரியா சென்றனர்.
சிரியாவில் உள்ள ரக்கா நகரில் புதிய மணப்பெண்கள் என உள்ள வீட்டில் மூவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு, ஷமீமா நெதர்லாந்து நாட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 27 வயதான இளைஞரை மணந்துகொண்டார்.
அவரது கணவர் இராணுவத்திடம் சரணடைந்துவிட்டார். ஷமீமா 40 ஆயிரம் பேர் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கிறார்.
ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக தற்பொழுதும் துளி அளவு கூட வருத்தப்படவில்லை எனத் ஷமீமா தெரிவித்துள்ளார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இறந்துவிட்டது.
தற்பொழுது அவர் கர்ப்பமாக உள்ளார். எனவே அவர் மீண்டும் பிரிட்டன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
அங்கு சென்றால் குழந்தைக்குப் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கும். ஒரு அமைதியான வாழ்கையை வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.