அண்டார்டிக்காவிற்குள் கொரானா வைரஸ் நுழையை முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு (who) தெரிவித்து உள்ளது.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் 435 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
இதுவரை கோரனாவால் 2,744 பேர் உயிர் துறந்துள்ளனர். 78,500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அண்டார்டிக்கா கண்டத்தை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் கொரானா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்டார்டிக்கா கண்டம் என்பது பனிப் பாறைகள் நிறைந்த இருண்ட கண்டம். இங்கு ஆறு மாதம் சூரிய வெளிச்சம் இருக்கும். ஆறு மாதம் இருண்டு காணப்படும்.
இங்கு பல்வேறு நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் உள்ளது. மனித போக்குவரத்து அதிகம் கிடையாது என்பாதால் இங்கு இன்னும் கொரோனா செல்லவில்லை.