நக்கீரா,
இது நீர் வீழ்ச்சி என்பது பொருள்குற்றம் அல்லவா? நீருக்கு இது வீழ்ச்சி அல்ல,, எழுச்சி
என்று வைரமுத்து சொல்வது போல 167 அடி உயர்ந்து நிற்கும் நயாகரா அருவி ஒரு அதிசயம் தான்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஒரு பகுதியையும், கனடாவிலுள்ள அண்டாரியோ ஒரு பகுதியையும் இணைத்து 3 அருவிகளின் சங்கமம் தான் இந்த நயகரா.
ஹார்ஸ் ஷூ அருவி தான் 90% நயகரா நீர் வீழ்ச்சிக்கு முக்கிய பங்கானது.
அதிகபட்சமாக ஹாசர்ஸ் ஷூ அருவியில் 6400 கியூபிக் மீட்டர் தண்ணீர் கொட்டும். இதுவே கோடை காலத்தில் 2800 கியூபிக் மீட்டர் கொள்ளளவு தண்ணீர் கொட்டும்.
இதில் 90 சதவீத தண்ணீரை ஹைட்ரோ எலக்ட்ரிக் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில பருவ மாற்ற காலங்களில் 1400 கியூபிக் மீட்டராக ஆக குறையும்.
பாறை அரிப்பின் காரணமாக மற்றும் மண்களில் உள்ள உப்புக் கரைசலின் காரணமாகவும் நயாகரா அருவி வெளிர் பச்சை நிறமாக காட்சியளிக்கும்.
இரண்டு கரைகளிலும் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக நயகராவின் அகலம் குறிப்பிடத்தக்க வகையில் வருடா வருடம் கூடிக் கொண்டே செல்கிறது.
அதாவது 10900 ஆண்டு கணக்கெடுத்து பார்த்தால் முன்பிருந்து அருவியை விட தற்போது 11 கிலோ மீட்டர் தூரம் அதிகமாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் அதனுடைய வடிவமைப்பு ஆனதும் மாறிக்கொண்டே வருகிறது.
நயகரா நீர் வீழ்ச்சியில் சாதனைக்காக முதல்முறையாக குதித்தது ஒரு பெண்மணி, ஆணி எட்ஸன் டெய்லர்.
அவர் இந்த சாதனைக்காக ஒரு பேரலில் தன்னைப் பொருத்திக் கொண்டு நீர் நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் இவர் உயிர் பிழைத்து விட்டார்.
நயகரா நீர்வீழ்ச்சி தோன்றின் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
உறைபனிக் காலத்தில் இது முற்றிலும் குறைந்து போவதில்லை நீர் வரத்து மற்றும் சற்று குறைந்து காணப்படும்.
நயகரா நீர்வீழ்ச்சியின் மூலம் பெறப்படும் மின்சாரம் ஆனது மிக அதிக அளவில் உள்ளது.
அதாவது நியூயார்க் மற்றும் ஆண்டேரியாவின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இங்கு இருந்து பெறப்படும் மின்சாரம் ஆகும்.
வருடத்திற்கு 30 மில்லியன் உலக மக்கள் இந்த நயகரா நீர்வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா பயணிகளாக வருகிறார்கள்.
200 வருடங்களுக்கு மேலாக நயகரா நீர்வீழ்ச்சியே சிறந்த தேனிலவு காண இடமாக கருதப்படுகிறது