சமூக நிலை, பொருளாதார நிலை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுதந்திரம் மற்றும் ஊழல் லஞ்சம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு ஐநா பட்டியலை தயாரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதல் இடத்தில் பின்லாந்து இருந்து வருகிறது.
மொத்தம் 153 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் டென்மார்க், மூன்றாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்து, நான்காவது இடத்தில் நார்வே உள்ளது.
ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகளும், ஸ்வீடன், நியூசிலாந்து, ஆஸ்திரியா, லக்சம்பர்க் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
லக்சம்பர்க் நாடு முதன் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்திருக்கிறது.
முதல் 10 இடங்களில் நியூசிலாந்து நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடாகும்.
11வது இடத்தில் கனடாவும், பிரிட்டன் 13வது இடத்திலும் நேபாளம் 15 ஆவது இடத்திலும், அமெரிக்கா பதினெட்டாவது இடத்திலும் உள்ளது.
பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சிறிய நாடா நேபாளம் மக்கள் அமெரிக்கர்களை விட சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று இந்தப் பட்டியல் கூறியுள்ளது.
ஆசிய நாடான தீவிரவாதிகளின் முக்கிய நாடான பாகிஸ்தான் 29வது இடத்திலும் மற்றும் தெற்காசிய நாடான இலங்கை 107 வது இடம் மற்றும் வங்கதேசம் 130 வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 144 வது இடம் கிடைத்துள்ளது.
அதாவது மகிழ்ச்சியில்லாத பட்டியலில் இந்தியாவிற்கு பத்தாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது இடத்தில் தெற்கு சூடானும், மூன்றாமிடத்தில் ஜிம்பாப்வே உள்ளன.
சந்தோஷமான சிட்டி பட்டியலில் பின்லாந்தின் ஹேல்சில்கி நகரும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கின் ஆர்கஸ் நகரும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தில் வெல்லிங்டன் நகரும் பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரும் உள்ளன.
சந்தோசம் இல்லாத சிட்டி பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரும்,
இரண்டாம் இடத்தில் ஏமன் நாட்டின் சனா நகரும், 3வது இடத்தில் பாலஸ்தீன நாட்டின் காசா நகரும் உள்ளன.
இந்தியாவில் தலைநகரான டெல்லி நகரம் மகிழ்ச்சியில்லாத பட்டியலில் இடம் பிடித்துள்ளது