ட்ரம்ப்பின் மூர்க்க குணம்: சுவரினால் வந்த வினை?
ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போதே, ‘மெக்சிக்கோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுவர் கட்டுவேன்’ என வாக்குறுதிகொடுத்தார்.
இந்த சுவர் எழுப்புவதன் மூலம், அமெரிகாவிற்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நீங்கும். மர்ம நபர்கள் அமெரிக்காவிற்குள் ஊடுருவுவது தடுக்கப்படும்.
எனவே ட்ரம்ப், சுவரை கட்டியே தீரவேண்டும் என்ற முழு முனைப்புடன் உள்ளார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் இதை ஆதரிக்கவில்லை. சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், கவர்மெண்டிற்கு செல்லவேண்டிய நிதியை முடக்கிவிட்டார். இதனால் அமெரிக்க அரசுப்பணிகள் முடங்கிப்போனது.
“கவர்ன்மென்ட் ஷட் டவுன்” என இது அழைக்கப்படுகிறது. இதுவரை மூன்று வாரங்களாக முடங்கிவிட்டது.
இதற்கு முன்னர், 1995-ம் ஆண்டு 22 நாட்கள் முடங்கியதே அமெரிக்க வரலாற்றின் அதிகபட்ச கவர்மெண்ட் ஷாட் டவுன். ஆனால், ட்ரம்ப் அந்த ரெக்கார்டையும் முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.
முழு அரசும் முடங்கவில்லை என்றாலும், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக பல இடங்களில் துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை.
பல அரசு ஊழியர்கள் #ShutdownStories என்ற ஹேஸ்டாக்கில் சோகக் கதையை ட்விட்டரில் எழுதி வருகின்றனர்.
ட்ரம்ப்பின் இறுதியான முடிவு என்ன?
காங்கிரஸ்காரர்களை மீறி செயல்பட தயராக உள்ளார். அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சுவரைக் கட்டியே தீருவேன் என உறுதியாக கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் சந்திப்பிற்குப்பின் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுவர் கட்டும் திட்டம் நிறைவேறும்வரை அமெரிக்க அரசு ஊழியர்களின் நிலை திண்டாட்டமே!