காங்கிரஸ் எம்எல்ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது என புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் கூறியது மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகம் முழுவதும் காட்டுதீ வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் இது வரை 120000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000க்கும் மேல் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு அதிகாரப்பூர்வ மருந்து எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை. பல்வேறு மருத்துவக்குழுக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் முடிந்த வரை பாதுகாப்பான சூழலில் நம்மை நாமே சுத்தமாக வைத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் நிரூபிக்கப்படாத பல்வேறு போலி வைத்திய முறைகளை சமூக வலைதளத்தில் சிலர் பரப்பிவருகின்றனர்.
பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. ஆனால், அந்தத் தகவல் நிரூபிக்கப்படவில்லை என்று விளக்கமளித்தது உலக சுகாதார நிறுவனம்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார்
இந்நிலையில் கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்று புதுச்சேரியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொரோனா பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இட்லி தோசைக்கு பதிலாக பழைய சோறு சாப்பிட்டால் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடி விடும் என கூறும் பொழுது மேடையில் இருந்து மற்ற அமைச்சர்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டனராம்.
இது குறித்து அவரிடம் கேட்கையில் வாட்ஸ்ஆஃப் வலைதளத்தில் வந்த ஃபார்வார்டு செய்தியை படித்ததாக கூறினார்.