Home சினிமா கோலிவுட் சண்டை, சச்சரவுக்கு மத்தியில் ரெடியான துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!

சண்டை, சச்சரவுக்கு மத்தியில் ரெடியான துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!

347
1
Vishal Thupparivaalan 2 First Look

Thupparivaalan 2 First Look; துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Thupparivaalan 2 First Look) நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோரது நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் படம் துப்பறிவாளன் (Thupparivaalan).

துப்பறிவாளன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2) தயாராகி வருகிறது.

இந்த நிலையில், துப்பறிவாளன் 2 குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் விஷால் – மிஷ்கின் இடையிக் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், விஷாலுக்கு இயக்குநர் மிஷ்கின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு விஷால் ஒத்துவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது மிஷ்கினின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகாலாவதியாகும் காங்கிரஸ்; கவலையில் தொண்டர்கள்
Next articleகாங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here