Home அரசியல் மரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி

மரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி

276
0

                   மரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி

டெல்லியில் நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேறும் கடைசி வேளையில் உலகில் எந்தெந்த நாடுகள் மரண தண்டனையை விரும்புகின்றன என்பதை இந்த கட்டுரையில் காண்போம் .

சர்வதேச மன்னிப்பு சபை:

முதலில் இந்தியாவில் மிக கொடூரமான  குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவற்றை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவதில்லை என்று சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது .

இந்தியாவில் கடந்த 2015 க்கு பிறகு யாருக்கும் இதுவரை தூக்கு தண்டனை  நிறைவேற்ற படவில்லை .

முன்னதாக கடந்த 1990 களில் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது .

மரண தண்டனை விதிப்பதில்  இந்தியாவை விட  மற்ற நாடுகள் முன்னணியில் உள்ளன கடந்த 2018  இல் ஈரான், சவூதி அரேபிய ,வியட்நாம் ,ஈராக்    நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தண்டனைகள் நிறைவேற்ற பட்டுள்ளன .

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் 250  பேருக்கும் வங்காளதேசத்தில் 229 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற பட்டுள்ளன

80 விழுக்காடு மரண தண்டனை:

2018 இல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றியதில் 80 விழுக்காடு ஈரான் ,சவூதி அரேபிய ,வியட்நாம் ,ஈராக் போன்ற நாடுகளில் நடந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன .

ஆசியா பசுபிக் பிராந்திய

ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் 46 விழுக்காடு அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2018  இல்  25  பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது .

சீனாவின் தண்டனை விவரங்கள்:

முக்கியமாக சீனாவின் தண்டனை விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது .

இருப்பினும் அங்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படுவதாக  சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சிரியாவின் போர் காரணமாகவும் வடகொரியா நாட்டின் தகவல்களும் கிடைக்க பெற வில்லை எனவும் தெரிவித்துள்ளது .

வியட்நாம் அரசு ரகசியமா:

கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் அரசு வெளியிட்ட தகவலில் கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றி உள்ளதாக அதிகார பூர்வாமாக தெரிவித்துள்ளது , இருப்பினும் வியட்நாமில் இதுவரை எவ்வளவு நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

உலக அளவில் பார்த்தோமானால் கடந்த 2017 ஆண்டை விட 2018 ஆண்டில் மரண தண்டனை எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது அதன் படி 2017  இல் 2591 ஆக இருந்த நிலையில் 2018  இல் 2531 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

உலக அளவில் உயரும்:

பொதுவாக உலக அளவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை குறைந்து வருகிறது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .

இருப்பினும் இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் வெளியில் தெரிய வந்த தகவல்களின் அடைப்படையில் வெளியிடப்பட்டவை ஆகும்.

பல்வேறு நாடுகளின் உண்மைத்தகவல் வெளி வரும் பட்சத்தில்  மரண தண்டனைகள்  எண்ணிக்கை  மேலும்  உயரும்  என கருத படுகிறது .

 

Previous articleமாஸ்டர் போஸ்டரில் மீரா மிதுன்: யார் யாரை காப்பி அடிச்சது?
Next articleஸ்ரீ இராம நவமி சிறப்புகள் மற்றும் விரதமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here