Home சினிமா கோலிவுட் மாஸ்டர் போஸ்டரில் மீரா மிதுன்: யார் யாரை காப்பி அடிச்சது?

மாஸ்டர் போஸ்டரில் மீரா மிதுன்: யார் யாரை காப்பி அடிச்சது?

633
0
Meera Mithun

Master Poster biggboss Meera Mithun; மாஸ்டர் போஸ்டரில் மீரா மிதுன் :

யார் யாரை காப்பி அடிச்சது? மாஸ்டர் இரண்டாம் லுக் போஸ்டரை காப்பி அடிச்சு மீரா மிதுன் (meera mithun) தனது புகைப்படத்தை இடம்பெறச் செய்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் இரண்டாம் லுக் போஸ்டரை காப்பி அடிச்சு அதனை மீரா மிதுன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு (Master audio launch) விழா நடந்தது.

தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது. கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.

இதில், விஜய் அமைதி என்று சொல்லும் வகையில், வாயில் விரலை வைத்து காட்டியவாறு இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் போஸ்டரை காப்பியடித்த meera mithun, அதில், தனது புகைப்படத்தை பதிவிட்டு யார் யாரை காப்பி அடிச்சது என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: யார் யாரை காப்பியடித்துள்ளது. இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிங்பிஷர் ரேம்ப் வாக் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது. எனவே, இதற்கான பதில் கிடைத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, முன்னணி நடிகைகள் தனது போஸ்களை காப்பியடித்து வருவதாக கமெண்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா மிதுனின் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரா மிதுன் ஒரு கொரோனா வைரஸ், அதை யாரிடமும் பரப்ப வேண்டாம் என்று பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅருவா பிரச்சனையே முடியல: அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?
Next articleமரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here