எம்எல்ஏ காத்தவராயன் சொத்து ஒரு ஓலை குடிசை, கட்டில், அலமாரி மற்றும் அவர் நின்ற குடியாத்தம் தொகுதி மக்கள். இப்படி ஒரு எம்எல்ஏ 2020-லா என ஆச்சரியமாக உள்ளதா?
எம்எல்ஏ காத்தவராயன் – Kathavarayan MLA
காத்தவராயன் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட குடியாத்தம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று 9 மாதங்களே ஆனா நிலையில் இறந்துவிட்டார்.
இவருக்கென சொந்தமாக ஒரு ஓலை குடிசை, கட்டில், அலமாரி மட்டுமே இருந்துள்ளது. அப்படி ஒரு எளிமை கொண்ட மனிதர்.
இவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக தன்னை வளர்த்துகொண்டு இந்த உயர்த்தை அடைந்துள்ளார்.
2016-ல் குடியாத்தம் எம்எல்ஏ சீட் மறுக்கப்பட்டது. 2019-ல் இடைத்தேர்தலிலும் சீட் மறுக்கப்பட்டது.
இந்த முறை இவருக்கு சீட் ஒதுக்கியவுடன் அதிமுக கட்சியினர் கூட ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் செல்வாக்கு இவர் பக்கம் இருந்ததால் வெற்றி பெற்றுள்ளார்.
இவருடைய இறுதிச் சடங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.