Home அரசியல் ராமதாஸ் எச்சரிக்கை; தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்களின் அலட்சியமே காரணம்

ராமதாஸ் எச்சரிக்கை; தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்களின் அலட்சியமே காரணம்

758
0
ராமதாஸ் எச்சரிக்கை

ராமதாஸ் எச்சரிக்கை; தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்களின் அலட்சியமே காரணம், ராணுவ பாதுகாப்பு இறங்கினால் ஊரடங்கு இன்னும் தீவிரமாக இருக்கும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததாகவே தெரியவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதற்கு மக்களின் அலட்சியமே காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நிலைமையை துல்லியமாக வர்ணிக்க வேண்டுமென்றால், ‘சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவர், மக்கள் ஊரடங்கு என்றால் என்னவென்பதை மறந்து வெளியில் இஷ்டத்துக்கு ஊர் சுற்றி வருகிறார்கள். யாருக்கும் எந்தவித அக்கறையும் இல்லை.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் தினம் ஓரிரு மணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என எச்சரித்தும் மக்கள் அதை முறையாக கடைபிடிப்பது இல்லை.

ஒரு சிலரின் அலட்சியத்தினால் அவரை சுற்றி இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது அதை அவர்கள் உணர்வதில்லை.

எடுத்துக்காட்டாக அவர் சிங்கப்பூரை கூறியுள்ளார். முதலில் மிகவும் மெதுவாக பரவிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர் ஊரடங்கை அமல்படுத்த தாமதித்ததால் இப்பொழுது 10000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே நிலைமைதான் நாளை தமிழகத்திற்கும் வரலாம். சென்னையை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட அதற்கே அந்த நிலைமை என்றால் தமிழகம் என்னவாகும் என்பது மக்கள் கையில் தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here