Home அரசியல் தமிழக முதல்வரை சாடிய கமல்ஹாசன்

தமிழக முதல்வரை சாடிய கமல்ஹாசன்

372
0

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிரதமர் அறிவித்தபடி 21 நாள் மக்கள்  ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அன்றாட பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் சிலர் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மக்கள் ஒன்றாய் சமைத்து அவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

இன்று நம் மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனியார் நிறுவனங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும், மக்களோ யாரும் ஏழை மக்களுக்கு நேரடியாக உணவு அளிக்கக் கூடாது என்றும், அப்படி உணவளிக்க விரும்புவர்கள் மாநகராட்சி போன்ற அரசாங்க ஊழியர்களை தொடர்பு கொள்ளவும் பணம் நிதியாக அளிப்பவர்கள் நேரடியாக முதல்வர் நிதி அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

இதை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கண்டித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு சில பதிவுகளில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது :

“அவர்கள் அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர்.

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது.

வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.

This is no time for commission or omission.People are watching.”

https://platform.twitter.com/widgets.js

என்று பதிவிட்டுள்ளார்.

Previous articleஇந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா – சவுரவ் கங்குலி
Next articleசர்வதேச பொருளாதாரத்தில் மீண்டும் ரகுராம் ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here