லோகஸ்டு (Locust); இதன் தன்மையும் அபாயமும், உலகை அச்சுறுத்தும் லோகஸ்ட் என்ற வகை வெட்டுக்கிளி பற்றி இந்த பதிவில் காண்போம்.
லோகஸ்டு வெட்டுக்கிளி வாழ்வியல்
அதிக எண்ணிக்கையிலான குட்டி கொம்புடைய வெட்டுக்கிளிகள் லோகஸ்ட் என்றழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் பாலைவனத்தில் காணப்படும்.
அதாவது, ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் பெரும்பாலும் இவ்வகை வெட்டுக்கிளிகள் காணப்படும். பாலைவன வெட்டுக்கிளிகளான லோகஸ்ட் பெரும்பாலும் தனித்தே வாழ விரும்பும்.
இவை கூட்டமாக பயணிக்கும் போது பூக்கள், பழம், விதைகள் மற்றும் முழு தாவரத்தையும் அழித்து உண்ணக்கூடியது.
லோகஸ்டுகள் தங்கள் நிறங்களை மாற்றக்கூடிய தன்மை கொண்டவை இதனால் இவற்றால் எதிரிகளிடம் இருந்து எளிதில் தப்பிக்க முடிகிறது.
உலகநாடுகள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் விவசாயத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன.
கூட்டமாக திரியும் இவை 150 கிலோமீட்டர் வரை உணவைத்தேடி பயணிக்கும் தன்மை கொண்டவை. இவை 2,000 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும் சக்தி வாய்ந்தவை.
பச்சை நிறத்தில் எங்கு பயிர்களைக் கண்டாலும் அவற்றை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடும். லோக்ஸ்டுகள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் அடிக்கடி உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது.
லோகஸ்டுகளால் ஏற்பட்ட பாதிப்புகள்
1880-ல் ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் மக்கள் இவற்றைக் கண்டு பயந்து பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம்.
1955-ம் ஆண்டு மொராக்கோவிற்கு வந்த லோகஸ்டுகள் கூட்டம் 20 கிலோமீட்டர் வரை இருந்ததாம். மொராக்கோவில் தினம் 1000 கிலோமீட்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதம் செய்தனவாம்.
அமெரிக்காவின் உட்டா பகுதியில் அழிவை ஏற்படுத்தி சென்ற லோகஸ்டுகள் எண்ணிக்கையில் 1250 கோடியாம்.
பாகிஸ்தான் மற்றும் சோமாலியா அவசரநிலை பிரகடனப்படுத்தின. மேலும் மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளின் விளைநிலங்களும் பெரும்பாலும் லோகஸ்டுகள் அழிவில் இருந்து தப்பிக்கவில்லை.
பாகிஸ்தானின் பாலைவனத்தில் இருந்து வந்த லோகஸ்டுகள் இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் பயிர்களை சேதம் செய்தன.
2003-05 ஆப்பிரிக்காவில் மட்டும் 2.5 பில்லியன் உணவுப் பயிர்களை சேதம் செய்துள்ளது. 1,75,000 ஏக்கர் பயிர்கள் 1.8 மில்லியன் டன்ஸ் உணவுப் பொருட்கள் 350 சதுரகிலோமீட்டர் பரப்பளவிலான பயிர்களை நாசம் செய்தது.
இது ஓராண்டுக்கு 10 லட்சம் பேருக்கான தேவையான உணவு பொருள் உற்பத்தியாகும் பயிர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
FAO அமைப்பின் ஆய்வு
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நடத்திய ஆய்வில் பாதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் முறையே,
1. ஆப்பிரிக்காவின் சோமாலியா, எரித்திரியா, சியூட்டி, எத்தியோப்பியா ஆகியவையும்
2. செங்கடல் பகுதிகளான சவுதி, ஓமன் மற்றும் ஏமன்
3.தெற்கு ஆசியாவின் பகுதிகளான ஈரான், இந்தியா, பாகிஸ்தான் போன்றவையும் அடங்கும்.
மிக அதிக பாதிப்பு ஆப்பிரிக்காவின் பகுதிகளான சோமாலியா எத்தியோப்பியா போன்றவைகள்.
இங்கிருந்து கிளம்பிய லோகஸ்டுகள் கென்யா வழியாக உலகின் 14 நாடுகளுக்கு பரவியது. கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவு எத்தியோப்பியா, சோமாலியா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
அதேபோல கென்யாவும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை தற்சமயம் ஏற்படுத்தியுள்ளது இந்த லோகஸ்டுகள்.
FAO அமைப்பின் கெய்த் கிரிஸ்மென் ஒரு சிறு லோகஸ்ட் கூட்டம் 2,500 பேருக்கான ஒரு வருடத்திற்கான உணவு தரும் பயிர்களை அழிக்க முடியும் என்கிறார். ஒரு பூச்சியானது 10 பேரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்கரம்
மார்ச் மற்றும் ஏப்ரலில் அறுவடைக்காலம் என்பதால் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவிற்கு உதவிக்கரம் நீட்ட ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.
தற்போது அங்கு தேவையான அளவு மழை பொழிந்து பயிர்கள் விளைச்சல் நன்றாக இருப்பதாலும் ஈரப்பதம் காரணமாகவும் 10 கோடிக்கும் அதிகமான பூச்சிகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த நிதியில் மருந்து தெளித்து பூச்சிகளை அழிக்க முடிவு செய்து, கென்யா அரசு 5 சிறிய ரக விமானங்களை வாங்கி மருந்து தெளித்து வருகிறது.