வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று ஒன்று உண்டா? அது ஏன் மற்ற நாட்களில் தெரிவதில்லை? (Great Conjunction tamil) இயேசு பிறந்தபோது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியதா?
இயேசு பிறப்பு, வாசலில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
கிறிஸ்தவ பைபிள் வழியாக மத்தேயு கூறியதாவது, இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்’ என்றார்கள்.
இயேசு பிறப்பின் அறிகுறியே இந்த கிறிஸ்துமஸ் விண்மீன். அந்த விண்மீன் இருந்த திசையை நோக்கி சென்றே ஞானிகள் இயேசுவை மாட்டுத்தொழுவத்தில் கண்டெடுத்தனர்.
இதுதான் இயேசு பிறப்பை பற்றி பைபிளில் கூறப்படுவது. இதன் காரணமாகவே கிறிஸ்துமஸ் தினத்தன்று வாசலில் நட்சத்திரம் தொங்கவிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா?
கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது மற்ற நட்சத்திரங்களைப் போல அல்ல. கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது கோள்கள் மூலம் உருவாகும் ஒளி. அதையே அன்றைய காலகட்டத்தில் நட்சத்திரம் எனக் கணக்கிட்டு உள்ளனர்.
சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டு பெரிய கோள்களான சனியும், வியாழனும் அருகருகே சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் மிகப்பெரிய ஒளியே பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரமாக தெரிகிறது.
கிறிஸ்துமஸ் தாத்தா கதை எப்படி உருவானது? சண்டா கிளாஸ் ஏன் சிவப்பு நிற ஆடை அணிந்து உள்ளார்?
கிரேட் கன்ஜெக்சன் (Great Conjunction)
அறிவியலின் படி சனியும், வியாழனும் அருகருகே சந்தித்துக்கொள்ளும் நிகழ்வை கிரேட் கன்ஜெக்சன் (Great Conjunction) என்று அழைக்கின்றனர்.
வியாழன் ஒருமுறை சூரியனை சுற்றிவர 11.86 வருடம் ஆகும். சனி ஒரு முறை சூரியனை சுற்றி வர 29.4 வருடம் ஆகும்.
இப்படி சுற்றி வரும்போது ஓவ்வொரு 20 வருடம் அல்லது 19 வருடத்திற்கு ஒருமுறை அருகருகே சந்தித்துக்கொள்ளும் இந்த நிகழ்வையே கிரேட் கன்ஜெக்சன் என அழைக்கின்றனர்.
397 வருடங்களுக்கு ஒருமுறை மிகவும் நெருக்கமாக வரும். அப்போது ஏற்படும் ஒளி வழக்கத்தை கட்டிலும் மிகவும் பெரிய நட்சத்திரம் போன்று காணப்படும்.
2020 டிசம்பர் 21 அன்று இந்திய நேரப்படி 11:50 pm இந்த நிகழ்வை வானில் காணலாம். 6.1 arcminutes தூரத்தில் மிகவும் நெருக்கமாக சனியும், வியாழனும் சந்திகின்றது.
இதற்குமுன் 1623-ஆம் ஆண்டு இதைவிட மிகஅருகில் (5.2 arcminutes) சனியும், வியாழனும் சந்தித்துக்கொண்டது. ஆனால் அவ்வளவு தெளிவாக பூமியில் இருந்து பார்க்கமுடியவில்லை.
கிறிஸ்துமஸ் மரம் வரலாறு | கிறிஸ்துமஸ் மரம் உண்மை பெயர் என்ன?
இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏன் என்றால் 2020, 2080 ஆகிய வருடங்களில் இந்த நிகழ்வு மிகநெருக்கமாக நடைபெறும்.
28 மே 2000 அன்று இந்த நிகழ்வு நிகழ்ந்தாலும் அது சூரிய உதயத்தின்போது தோன்றியது. எனவே அதை தொலைநோக்கி உதவியில்லாமல் பூமியில் இருந்து பார்க்க முடியவில்லை.
அடுத்ததாக வரும் 2040, 2080 ஆண்டுகளில் காணும் வாய்ப்பு உள்ளது. 2080 நிகழ்வது 6.0 arcminutes தூரத்தில் நிகழும் இதன்பிறகு இவ்வளவு நெருக்கமாக 2417-ல் 5.4 arcminutes தூரத்தில் நிகழும். எனவே இந்த நூற்றாண்டில் இரண்டு முறை நெருக்கமாக காணும் வாய்ப்பு உள்ளது.