Home சிறப்பு கட்டுரை கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

697
0
கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்? தித்திக்கும் கரும்பை சுவைத்து தண்ணீர் அருந்தியதால் தத்தளித்ததாம் நாக்கு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

இனிப்பின் அரசன்

இனிப்பின் சுவையை பண்டிகை நாளில் முழுமையாய் உணரவைக்கும் பொருள் கரும்பு. கசக்கும் மருந்தை பார்த்திருப்பாம் ஆனால் இனிக்கும் மருந்தை பார்த்திருப்போமா???

உண்மையில் நாம் பார்த்திருப்போம் கரும்பின் வடிவில், அதை மருந்து என்று தெரியாமல் சுவைத்திருப்போம். இப்படிப்பட்ட கரும்பின் அறியப்படாத பலவற்றை இங்கு காண்போம்.

சர்க்கரை நோய் நண்பன் கரும்பு

கரும்பின் சுவையை சுவைக்காதவர் எவரும் இல்லை. ஏன் சர்க்கரை நோயுடையவரும் இதன் சுவையை சுவைக்கலாம்.

ஏனென்றால் கரும்பின் இனிப்பு தன்மை உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் சீராக வைத்திருக்க உதவும்.

அதுமட்டுமில்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை உண்ணும் இனிப்பால் எந்தவித தீமையும் ஏற்படுத்தாமல் சுவையுடன் கூடிய நன்மை தரும் ஒன்றே ஒன்று கரும்பு.

கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

இத்தகைய ஆற்றல் உடைய கரும்பை சுவைத்தவுடன் தண்ணீர் அருந்தினால் ஏற்படும் விளைவுகளும் உண்டு.

அந்த விளைவுகளைவை அனுபவித்திருப்பார்கள்  ஆனால் எது எப்படி உண்டானது என்பது யாரும் அறியாத ஒன்று.

பலர் கரும்பை சுவைத்தவுடன் தண்ணீர் அருந்தியதால் நாக்கு எரிச்சல் மற்றும் நாக்கினில் கொப்பளங்கள் ஏற்படுத்திருக்கும்.

கரும்பின் கால்சியம்

ஏனென்றால் கரும்பில் இயற்கையாகவே சுண்ணாம்பு சக்தியுடைய கால்சியம் அதிகம் இருக்கிறது. கரும்பிலிருந்து கிடைக்கும் கால்சியம் மனித உடம்பில் இருக்கும் எலும்புகளுக்கு நல்லது.

இதன் குறைபாடு காரணமாக பலபேர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் கால்சியம் இயற்கையாகவே கரும்பின் மூலம் நமக்கு கிடைக்கிறது.

தித்திக்கும் கரும்பை சுவைத்து தண்ணீர் அருந்தியதால் தத்தளித்ததாம் நாக்கு

இனிப்பின் சுவையுடன் மருத்துவம் அளிக்கும் கரும்பில் இருக்கும் சுண்ணாம்பு என்னும் கால்சியத்தால் பிரச்சனையும் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்.

பொதுவாகவே சுண்ணாம்பு வாய்க்குள் பட்டால் வாய் வெந்துவிடும் என்பார்கள். அதுபோல கரும்பில் இருக்கும் சுண்ணாம்பு தன்மையுடைய கால்சியம் நம் எச்சிலுடன் சேரும்போது ஒருவிதமான வேதிவினையை உருவாக்கிறது.

இந்த சமயத்தில் நாம் தண்ணீர் அருந்துவதால் நம் நாக்கினில் வெப்பம் அதிகமாகும்.  இதனால் ஒருவிதமான எதிர்வினை ஏற்படுத்துவதால் நாக்கினில் கொப்பளங்கள் ஏற்படும். மேலும் நாக்கு வெந்துவிடும்.

தவிர்க்கும் முறை

இதை தவிர்க்க கரும்பை சுவைத்தவுடன் தண்ணீர் அருந்தாமல் 15 நிமிடம் கழித்து தண்ணீர் அருந்தினால் நாக்கு எரிச்சல் மற்றும் நாக்கினில் ஏற்படும் கொப்பளங்கள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மற்றபடி கரும்பில் உள்ள கால்சியத்தால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. உடனே தண்ணீர் குடிப்பதால் மட்டுமே நாக்கில் கொப்பளம் ஏற்படுகிறது.

Previous articleநெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா பதில் தனுஷ்-கீர்த்திசுரேஷ்
Next articleஷாருக்கான்-அட்லி: இதுக்கு ஒரு எண்டே இல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here