Home சிறப்பு கட்டுரை Mothers Day History அன்னையர் தினம் வரலாறு: அண்ணா ஜார்விஸ்

Mothers Day History அன்னையர் தினம் வரலாறு: அண்ணா ஜார்விஸ்

618
0
அன்னையர் தினம் Mothers Day History

Mothers Day History Tamil அன்னையர் தினம் வரலாறு: யார் இந்த அண்ணா ஜார்விஸ்? mother’s day 2020. தாய்மை போற்றும் தினம் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது?

நம்மை ஈன்றெடுத்த தாயை பெருமைப்படுத்தும் ஒரு நாள் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இந்த பாரம்பரியத்தை தொடங்கினர்.

Mothers Day History Tamil அன்னையர் தினம் வரலாறு

தற்போது நாம் கொண்டாடும் அன்னையர் தினம் 1908-ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸ் என்ற பெண்மணியால் தொடங்கப்பட்டது.

அண்ணா ஜார்விஸ் தன்னுடைய அம்மாவின் நினைவுச்சின்னத்தை மேற்கு விர்ஜினியாவில் இருக்கும் ஆண்ட்ரூ மெதோடிஸ்ட் ஜர்ஜில் கட்டினார்.

அண்ணா ஜார்விஸ் இதற்கு சங்கம் அமைத்து அதன் மூலம் பெரும்பாலோனோருக்கும், அமெரிக்க போரின் போது காயமடைந்த வீரர்களுக்கும் மருத்துவ உதவியும் செய்து வந்தார்.

1905-ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸின் அம்மா இறந்த பிறகே அன்னையர் தினத்திற்கான பேரணியை ஆரம்பித்தார். ஆனால் 1908-ஆம் ஆண்டு தான் அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டது.

அமெரிக்க காங்கிரஸ் 1908-ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை விடுமுறையாக்க வேண்டும் என்ற அண்ணா ஜார்விஸின் வேண்டுகோளை நிராகரித்தது.

பின் 1911-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ விடுமுறையாகவும், 1914-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுகிழமை கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.

பெரும்பான்மையான நாடுகளில் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மற்ற சில நாடுகளில் மார்ச் மாதம் வெர்னல் ஈக்குனக்ஸில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தந்த நாடுகளின் பாரம்பரியத்துக்கு ஏற்றவாறு கொண்டாடி வருகின்றனர். உலகத்திலையே நாம் கொண்டாடி வரும் பண்டிகைகளில் அன்னையர் தினத்தன்று தான் அதிக ஃபோன் கால்கள் செய்யப்படுகின்றதாம்.

Previous articleசோழர்கள்: யார் அந்த நிசும்பசூதனி ? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
Next articleகொரோனாவால் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here