Home சிறப்பு கட்டுரை உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் மெரினா இல்லை!

உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் மெரினா இல்லை!

5287
1
top 10 longest beach உலகின் நீளமான கடற்கரைகள் அர்பன் பீச் marina beach tamil

உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் மெரினா இல்லை!. டாப் 10 பீச். top 10 longest beach in the world tamil. marina beach tamil. அர்பன் பீச் என்றால் என்ன?

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் டென் லிஸ்டில் மெரினா கடற்கரை இல்லை. அர்பன் பீச் என்றால் என்ன? மெரினா எந்த வகை கடற்கரை?

ஆசியாவில் உள்ள பெரிய கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா. இப்படி புகழ் வாய்ந்த மெரினா கடற்கரைக்கு இந்த பட்டியலில் இடம் இல்லை?

கீழே கொடுக்கப்பட்ட பட்டியல் உலகில் உள்ள கடற்கரைகள் நீளத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பத்து இடம் பிடித்த கடற்கரைகள் லிஸ்ட் இதோ.

10. லாங் பீச் (Long Beach)

இந்த பீச் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 28 Miles. இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றாகும்.

9. 90 மைல் பீச் (Ninety Miles Beach)

இந்த பீச் நியூஸிலாந்தில் உள்ளது. பெயர் தான் 90 மைல் பீச். ஆனால் அதனுடைய உண்மையான நீளம் 54 மைல்கள் தான். ஓசியான நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக நீளமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.

8.ப்லயா நோவில்லேரோ பீச் (Playa Novillero Beach)

இந்த பீச் மெக்சிகோவில் உள்ளது. இதனுடைய நீளம் 55 மைல் கல் தொலைவு. தென்அமெரிக்காவின் மிக நீளமான கடற்கரை இது.

7.கிராண்ட் ஸ்ட்ராண்ட் பீச் (Grand Strand Beach)

இந்த பீச் அமெரிக்காவில் உள்ள சவுத் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் அதிக பயணிகள் வந்து செல்லும் மிகப்பெரிய கடற்கரை. இதன் நீளம் 60 Miles.

6.ப்ரசெர் இஸ்லாண்ட் பீச் Fraser Island beach

ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்றாவது மிக நீளமான கடற்கரை. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கடற்கடரையின் மொத்த நீளம் 75 Miles.

5. காக்ஸ் பஜார் பீச் (Cox’s Bazar beach)

ஆசியாவின் மிக நீளமான கடற்கரை. வங்காளதேசம் நாட்டில் தான் இந்த பெரிய கடற்கரை அமைந்துள்ளது. 78 Miles.

4. 90 மைல் பீச் விக்டோரியா (Ninety Mile Beach, Victoria)

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை. இதனுடைய பெயரும் நயன்டி மைல் பீச் தான். 94 Miles.

3. பட்ரி ஸ்லாண்ட் பீச் (Padre Island beach)

அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்கரை இதுவாகும். டாக்சஸ் மாகாணத்தில் கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடல் பகுதியில் அமைந்துள்ளது. 113 Miles.

2. எய்ட்டி மைல் பீச் (Eighty Mile Beach)

ஆஸ்திரேலியாவின்  மிகப்பெரிய கடற்கரை. உலகின் மூன்று பெரிய கடற்கரைகளை கொண்ட பெருமை ஆஸ்திரேலியாவையே சேரும். 140 Miles.

1. ப்ரையா டூ கேஸினோ (Praia do Cassino)

உலகின் மிகப்பெரிய கடற்கரையைக் கொண்ட நாடு ப்ரேசில். இங்கு தான் உலகின் நீளமான கடற்கரை அமைந்துள்ளது. 158 Miles.

மெரினா கடற்கரை (marina beach)

நம்ம ஊர் மெரினாவின் மொத்த நீளம் 8 மைல் தொலைவு. இதன் நீளத்தின் அடிப்படையில் பார்த்தால் உலக அளவில் 25 லிருந்து 30க்குள் இடம் பெரும்.

ஆனால் மெரினா உலகின் இரண்டாவது பெரிய அர்பன் பீச் (urban beach). அதாவது நகர்புறத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பீச்.

இந்த வகை பீச்களில் வாட்டர் பார்க், ரிசார்ட், ஸ்விமிங் பூல், இலவச நுழைவு, குடைக்கு கீழ் அமர்தல், டேட்டிங், பொழுதுபோக்குதல் மற்றும் நகரத்தை ஒட்டியே உள்ள கடற்கரை.

இது போன்ற சிறப்பு அம்சங்கள் அமைந்த கடற்கரையைத்தான் அர்பன் பீச் என்று அழைப்பார்கள். அந்த வகையில் தான் மெரினா இரண்டாவது இடம் வகிக்கிறது.

பெரும்பாலனோர் உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

marina beach tamil. top 10 longest beach என்பதை விட டாப் 2, உலக அளவில் இரண்டாவது நகர்புற பீச் என்பதே சரி. top 10 longest river

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? 
Previous articleபவர்புல் லைட்வெயிட் ப்ரவ்சர் 2018
Next articleபறக்கும் கார்கள்; பற பற பறக்கலாம் இந்தியாவில்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here