Home சிறப்பு கட்டுரை Typhoid Mary; 30 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பற்றி தெரியுமா?

Typhoid Mary; 30 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பற்றி தெரியுமா?

737
0
Typhoid Mary

Typhoid Mary; 30 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பற்றி தெரியுமா? Mary Mallon 30 years quarantine, Typhoid Mary, டைபாயிடு பெண்மணி, மேரி மேலன்.

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்ள சுகாதார மையங்கள் அறிவுரை கூறியுள்ளது.

ஓரிரு மாதங்கள் தனிமையில் இருக்க நமக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் மேரி மெலன் என்ற பெண்மணி 30 ஆண்டுகள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

1869 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த இவர் 1884ஆம் ஆண்டு பிழைப்பிற்காக அமெரிக்கா குடும்பத்தோடு சென்றார். அங்கு சென்ற இடத்தில் வருமானம் இன்றி தவித்து வந்தனர்.

1906ம் ஆண்டு இவர் சார்லஸ் ஹென்ரி வாரன் என்ற ஒரு வங்கி அலுவலர் வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்ணாக பணிக்கு சேர்ந்தார்.

அக்குடும்பத்தில் இருக்கும் 11 பேருக்கு சமையல் வேலை செய்து வந்தார். திடீரென அக்குடும்பத்தில் 6 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது.

Mary Mallon
Mary Mallon

அக்காலத்தில் டைபாய்டு அரிதான நோய். உணவால் தன இது ஏற்பட்டிருக்கலாம் என மேரி மேலனை, சார்லஸ் பணி நீக்கம் செய்தார். நோய் எப்படி பரவியது என மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

மேலும் அவர் அங்கிருந்து சென்று மூன்று வீடுகளில் ஒரே நேரத்தில் பணி செய்தார். இதனால் அந்த மூன்று வீட்டில் இருப்போருக்கும் டைபாய்டு காய்ச்சல் பரவியுள்ளது.

வெவ்வேறு இடங்களில் டைபாய்டு காய்ச்சல் அதிகமாக பரவுவதாக மருத்துவர்கள் உணர்ந்தனர். இது எவ்வாறு யாரிடம் இருந்து பரவுகிறது என சோதிக்க ஆரம்பித்தனர்.

பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என கண்டறிய ஆரம்பித்தனர். இறுதியில் மேரி மெலன் தான் அனைவர் வீட்டிலும் பணி செய்தது தெரிய வந்தது.

டைபாயிடு பெண்மணி (Typhoid Mary)

அந்த அயர்லாந்து பெண்மணியை அழைத்து பரிசோதனை செய்தனர். அவருக்கு காய்ச்சலோ, அல்லது டைபாய்டிற்கான மற்ற அறிகுறிகளோ தென்படவில்லை.

இதனால் மருத்துவர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். ரத்த மாதிரியை சோதிக்க முடிவு செய்தனர். வந்த முடிவில் வாயடைத்துப் போனார்கள் மருத்துவர்கள்.

அத்தனை பேருக்கும் பரவி அதே பேட்டனில் இவரது ரத்தத்தில் டைபாய்டு நோய் இருந்துள்ளது. ஒருவரது ரத்தத்தில் இந்த நோய் இருக்கிறது ஆனால் அதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

டைபாயிடு பெண்மணி (Typhoid Mary)
டைபாயிடு பெண்மணி (Typhoid Mary)

இதனால் ரத்தத்தில் உள்ள நோயின் வயதை சோதித்த போது அது மேரியின் பிறவியிலேயே இருப்பது தெரிந்தது. பிறவியிலே இருந்து இவர் டைபாய்டு நோயாளி என உறுதிப்படுத்தினர்.

மேலும் அவரிடம் இருந்து அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அது பரவுகிறது என்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.

அவரை தனிமையில் வைத்து 30 ஆண்டுகள் சிகிச்சை கொடுத்தனர்.ஆனால் குணப்படுத்த இயலவில்லை. இறுதியில் 1938ம் ஆண்டு இறந்துவிட்டார் மேரி.

இதனால் மேரி மேலன் டைபாய்டு பெண்மணியென அழைக்கப்படுகிறார்.

Previous articleநாயகி சீரியல் நடிகை ஒரு டாக்டரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Next articleநிலாவுல கால் வச்ச நம்மல வெளியில கூட கால் வைக்க விடாம பண்ணிடுச்சு கொரோனா!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here