தமிழ் வார்த்தை விளையாட்டு. இன்றைய தலைமுறையினர் தமிழை மெல்ல மெல்ல மறந்துகொண்டு உள்ளனர். இதுபோன்ற நிலையில் அவர்களுக்கு, அவ்வபோது தமிழ் வார்த்தைகளை நினைவூட்டவே இந்த வார்த்தை விளையாட்டு. வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் திறமைகளை பரிசோதிக்கலாம்.
கேள்வி:
படத்தில் உள்ள விடுபட்ட தமிழ் எழுத்துக்களை கண்டுபிடிக்கவும். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் நீங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, என்னிடம் தோற்றுவிட்டேன் என இந்த படத்துடன் ஸ்டேட்டஸ் இடவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதற்கான விடையை உங்களுக்கு சொல்லுவேன்.
டிப்ஸ்: ஒரு வார்த்தையில் முதலில் விடுபட்ட இரண்டு எழுத்துக்கள் தான் மீண்டும் வரும். முதல் இரண்டு வார்த்தைகளில் விடுபட்ட எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள். அடுத்த மூன்று வார்த்தைகளில் மெய் எழுத்தும், உயிர்மெய் எழுத்தும் அடுத்தடுத்து வரும்.
விடை:
1.அமலகமலம்
2.சடலபுடலம்
3.சட்டதிட்டம்
4.கண்டதுண்டம்
5.சட்டவட்டம்
1.அமலகமலம் என்றால் பசுவின் கோமியம் என்று பொருள்.
2.சடபுடலம் என்றால் பருத்த உடல் என்று பொருள்.
3.சட்டதிட்டம் என்றால் சட்ட விதிமுறைகள் என்று பொருள்.
4.கண்டதுண்டம் என்றால் பல துண்டுகள் என்று பொருள்.
5.சட்டவட்டம் என்றால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் என்று பொருள்.