வாழ்க்கையை பயத்துடன் வாழ்பவர்களுக்கு தைரியம் பிறக்க வாழ்வு சிறக்க கால பைரவரை வழிபடலாம். சிவனின் அம்சமாக கருதப்படும் கால பைரவர் பயத்தை போக்கி மனதில் தைரியத்தை கொடுப்பவர்.
தேய்பிறை அஷ்டமி அன்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனைத்து மாத்திலும் தேய்பிறை அஷ்டமி அன்று சிவன் கோவில்களில் மாலை நேரத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும். இந்த ராகுகால நேரத்தில், வழிபாட்டில் கலந்துகொள்ளுதல் சிறப்பானதாக கருதப்படுகிறது.
எதிரிகளின் தொல்லைகள் தீர்ந்து நன்மைகள் கிட்டும்
இவ்வாறு காலபைரவரை தொடர்ந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் தீர்ந்து நன்மைகள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை.
காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் அனைத்து சிவன் கோயில்களிலும் ஈசான திசையில் நாயுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
தேய்பிறை அஷ்டமி போன்று ஞாயிற்று கிழமை மாலை நேரத்தில் வரும் ராகு காலத்தில் தீபம் ஏற்றியும், சிகப்பு நிற பூக்களால் அர்ச்சித்தும் கால பைரவரை வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
காவல் தெய்வமான கால பைரவர்
சிவன் கோவில்களில் நடை சாத்தியவுடன் சாவியை காவல் தெய்வமான கால பைரவரின் காலடியில் வைத்து செல்வர். மறுநாள் வந்து சாவியை எடுத்து நடை திறப்பர்.
இவ்வாறு காவலுக்கு பேர் போன கடவுளாக கருதப்படும் பைரவர் மன சஞ்சலங்களை போக்கி, பயத்தை நீக்கி, பில்லி ஏவல் போன்றவற்றில் இருந்து காத்து அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்க வல்லவர்.
நாளை(சனிக்கிழமை) தேய் பிறை அஷ்டமி வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து வளங்களையும் பெறலாம்.