Home ஆன்மிகம் 21/06/2020: நாளை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா? யார் பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டும்?

21/06/2020: நாளை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா? யார் பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டும்?

663
0

21/06/2020: நாளை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா? யார் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்? எந்த வேண்டிய காரியங்கள்  மற்றும் செய்யக் கூடாத காரியங்கள்?

நாளைய தினம் சார்வாரி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி 21-06-2020 ஞாயிற்றுக்கிழமையில் சூரிய கிரகணம் ஆனது வருகின்றது.

விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சி அமைந்திருந்தாலும் இயற்கையில் நடைபெறும் மாற்றங்களை எவராலும் தடுக்க இயலாது. ஆனால் நடைபெற போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அவர்கள் கணித்து கூறியுள்ளனர். அதன் படி நாளை நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தின் பலன்களை பார்ப்போம்.

சூரிய கிரகணம் கால வரையறை

ஆரம்ப காலம் – காலை 10 மணி 15 நிமிடம்

மத்திம காலம் – நண்பகல் 12 மணி 2 நிமிடம்

முடிவு காலம் – மதியம் 01 மணி 42 நிமிடம்

இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் ஏறக்குறைய 40% மட்டுமே தெரியும். சென்னையில் 35% கிரகணம் தெரியும். இந்திய அளவில் இராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானா மாநிலத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும்.

இந்த கிரகண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு மனித உடலை பாதிக்கும் எனவே தான் உணவு உண்ணுதல், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதல், வெறும் கண்ணால் சூரியனை பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர்.

கிரகண காலத்தில் பல்வேறு கோவில்கள் நடைசாற்றப்படும். சில கோவில்களில் நடை திறந்து இருக்கும் சிறப்பு யாகங்கள் மற்றும் கிரகண முடிவில் தீர்த்த வாரிகள் நடைபெறும்.

கிரகண காலத்தில் செய்யும் மந்திர ஜெபம் பல மடங்கு பலன்களை தரும். எனவே அவரவருக்கு தெரிந்த இறைவனின் நாமத்தை, மந்திரத்தை ஜெபிப்பது நல்ல பலன்களை தரும்.

வீட்டில் அனைவரும் கிரகணத்திற்கு முன்பே உணவு அருந்தி விட வேண்டும். அனைத்து உணவு பதார்த்தங்கள், தானியம், தண்ணீரில் தர்பை போட்டு வைக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்தவுடன் நீராடி, வீட்டினை மெழுகி விட்டு பின் பித்ருகளுக்கு தர்பணம் செய்யலாம். நீர் கரைகளில் அமர்ந்து ஜபம் செய்ய, தர்பணம் செய்ய இன்னமும் பலன்களை தரும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

ரோகிணி, மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, சுவாதி, திருவாதிரை, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் நிவர்த்தி ஆனதும் தவறாமல் நீராடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

அனைவரும் இறைவனின் திருநாமத்தை கிரகண காலத்தில் ஜெபித்து உலக நன்மைக்காக பிராத்தனை செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here