Home விளையாட்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு அதிசயம் நடக்குமா?

கிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு அதிசயம் நடக்குமா?

293
0

கிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு அதிசயம் நடக்குமா?

வருகிற மார்ச் 29 ஆம் தேதி13வது ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் பஞ்சாப் அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றிப் பார்ப்போம்.

பெரிதாக சோபிக்காத அணி

2008 தொடங்கிய ஐபிஎல், அந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக இருந்தார்.

மிகவும் வலுவான அணியாக இருந்தது பஞ்சாப், யுவராஜ் சிங் இருந்த வரை சென்னை அணியின் பரம எதிரியே பஞ்சாப் அணி தான்.

அந்த ஆண்டு ப்ளே ஆஃப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொல்கத்தா அணியிடம்
3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மற்ற அனைத்து ஐபிஎல் போட்டியிலும் புள்ளிபட்டியலில் 5 லிருந்து 8 வது இடைத்தை மட்டுமே பிடித்தது.

நிலையான வீரர்கள் இல்லை

மொத்தம் இந்த அணியில் 12 கேப்டன்கள், வருடத்திற்கு ஒரு கேப்டன் என்று மாற்றேவதால இந்த நிலையான வீரர் என்று யாருமில்லை.

இந்த அணியில் இதற்கு முந்தைய சீசன்களில் பிரட் லீ, ஷான் மார்ஷ், சேவாக், யுவராஜ் சிங், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் விளையாடியுள்ளனார்.

டேவிட் மில்லர் மட்டும் இந்த அணியில் 5 ஆண்டுகளாக விளையாடி இருக்கிறார்.

கடந்த வருடம் அஷ்வின் கேப்டனாக இருந்தார், அவர் இந்த வருடம் டெல்லி அணிக்கு மாற்றப்பட்டார்.

கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கே.எல் ராகுல் இந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் பேட்ஸ்மேன்கள்.

இந்த அணியில் டி20 அசுரன் கிரிஸ் கெயில் இந்த அணியில் இருப்பது இந்த அணிக்கு சிறப்பு அம்சமாகும்.

இவருடன் தொடக்க ஆட்டாகாரர்களாக களமிறங்க கே எல் ராகுல் இருப்பதால், அணியின் முதல் பத்து ஓவர்களில் அதிரடியாகவும் வேகமாகவும் ரன் சேர்க்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களுடன் மற்றோரு இந்திய தொடக்க ஆட்டகாரர் மயங்க் அகர்வாலும் இருப்பதால் கண்டிப்பாக அணிக்கு கூடுதல் சிறப்பு.

பேட்ஸ்மேன்களாக கருன் நாயர், சார்பரஸ் கான், மந்தீப் சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.

அணியின் ஆல்ரவுண்டரகள்

ஆல்ரவுண்டராக சர்வதேச டி20 வீரர் மேக்ஸ்வேல் இருக்கிறார், இது அணிக்கு பலம் சேர்க்கும்.

கூடுதல் ஆல்ரவுண்டரகளாக கிரிஸ் ஜோர்டான், கிருஷ்னப்பா கௌதம், ஜேம்ஸ் நிஷாம் போன்ற வீரர்கள் இருப்பதால் நடுவரிசை அணி தரமாக உள்ளது.

பந்துவீச்சாளர்கள்

பந்து வீச்சாளர்கள் சலியூட் மன்னன் கோட்ரால், வில்ஜோன், முகமது ஷமி, முஜிப் ரஹ்மன், முருகன் அஸ்வின் இருக்கிறார்கள்.

பந்து வீச்சளார்கள் பெரிதாக இந்த அணியில் இல்லை,
ஏலத்தில் இந்த அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இந்த அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பது எங்களின் கணிப்பு.

அணியின் பலம்

கடந்த சீசன்களில் 2014 ஆம் ஆண்டு ஜார்ஜ் பெய்லி இந்த அணியை திறம்பட வழி நடத்தினார்.

கே எல் ராகுல் அதை போல வழி நடத்தினால் அணிக்கு கூடதல் சிறப்பு.

இந்த அணி இந்திய இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணி, இந்த வருடமாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் என்று நம்புவோம்.

தற்போது உள்ள அணி முதலில் விக்கெட் விழுந்தாலும் நடுவரிசை பக்க பலமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

பந்துவீச்சு ரன்களை கட்டு படுத்தி விக்கெட்களை வீழ்த்தினால் இந்த அணி வெற்றி பெறும்.

அணியின் பலவீனம்

இந்த அணியில் அதிரடியாக ஆடிய மில்லர் இந்த ஆண்டு ஏலத்தில் எடுக்காமல் விட்டது இந்த அணிக்கு சிறு இழப்பு.

அணியை முழுமையாக புரிந்தவர் டேவிட் மில்லர், இந்த அணியில் நடுவரிசையில் ரன் சேர்த்து நிலைத்து விளையாட கூடியவர்.

இந்த அணியின் பலவீனமாக வருட வருடம் நிலையாக ஒரு வீரர்களை விளையாட வைப்பதில்லை, அணியை மாற்றியும், கேப்டனகளை மாற்றேவதால், தவறுகளை திருத்திக் கொள்ளமால், மேல் மேலும் புதிய தவறுகளை செய்து தோல்வி அடைகிறது.

தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 30 ஆம் தேதி டெல்லி அணியை சந்திக்கிறது.

இந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோப்பையை வென்று அதிசயத்தை நிகழ்த்துமா?

Previous articleTakkar: டக்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next articleமுத்தங்கள் ரொம்பவே முக்கியம்: ரைசா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here