தோனி ரெய்னா சென்னையில் வலை பயிற்சி
வருகிற மார்ச் 29ம் தேதி 13 வது ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் தோனி மற்றும் ரயில் நேற்று சென்னை வந்தனர்.
இன்று மார்ச் 3 ஆம் தேதியிலிருந்து அவர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐபிஎல் என்று சொன்னாலே எல்லோ ஆர்மி சென்னை சூப்பர் கிங்சுக்கு நம்ம தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா தான் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மட்டும் 2017 ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் தடை வாங்கியது, அதனால் அந்த ஆண்டு தோனி புனே அணிக்கும்,
ரெய்னா குஜராத் அணிக்கும் சென்றார்கள் அதனால் மீண்டும் இருவரும் சேர்வார்களா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மீண்டும் சென்னை பங்கேற்றபோது தோனியின் தலைமையின் கீழ் ரெய்னா விளையாடினார்.
2016 மட்டும் 2017 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் ரெய்னாவும் இன்றிலிருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை ரசிகர்களுக்கு தோனி தல என்றால் ரெய்னா சின்னத் தல ஆவார்.