SA vs AUS Updates; ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்த தென் ஆப்பிரிக்கா அணி.
ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
முதலில் நடந்த டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணிவை ஆஸ்திரேலியா வீழ்த்தி தொடரை வெற்றிபெற்றது.
அடுத்து நடந்த ஒருநாள் போட்டியில் முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வென்று ஏற்கனவே தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்று மூன்றாவது போட்டி சில்கட் மைதானத்தில் நடைபெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் லபுசானே சதத்துடன் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக லபுசானே 108 ரன்கள், வார்னர் 4 ரன்கள், பின்ச் 22 ரன்கள், ஸ்மித் 70 ரன்கள், ஷார்ட் 36 ரன்கள், மார்சஸ் 32 ரன்கள் அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமலும் , ரிச்சர்ட்ச்சன் 24 ரன்களும் எடுத்தனர்.
தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் நாட்ஜே மற்றும் ஸமட்ஸ் தலா 2 விக்கெட்டும் துபவிலோன் மற்றும் புலுக்குவாயோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.
தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
தென்ஆப்பிரிக்காவின் அதிகபட்சமாக ஸ்மட்ஸ் 84 ரன்கள், கிலாசன் 68 ரன்கள், வெரினே 50 ரன்கள், டிகாக் 26 ரன்கள், மலன் 23 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாசல்வுட் 2 விக்கெட்டும், ரிச்சர்ட்ச்சன் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கு, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்து வீட்டுக்கு அனுப்பி பழிதீர்த்துக் கொண்டது.
84 ரன்கள் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய ஸ்மட்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை கிலாசன் வென்றார்.