டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வு. ரசிகர்கள் அதிர்ச்சி. sports news tamil. விளையாட்டுச் செய்திகள். டென்னிஸ் செய்திகள்.
மரியா ஷரபோவா ஓய்வு
பிப்.27: உலகளவில் டென்னிஸ் விளையாட்டில் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.
மரியா ஷரபோவா கடந்த 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைப் பெற்றார். 17வயதிலே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்குபெற்று விளையாடிவர் ஆவார்.
டென்னிஸ் போட்டியில் திறமையான வீராங்கனை மட்டுமில்லை அழகான வீராங்கனையும் ஆவார். மாடலிங்கிலும் வலம் வந்தார்.
ஊக்க மருந்து சர்ச்சை
ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். ஆனால் ஒரு தடவை 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாதம் தடையும் வாங்கினார்.
தடை நீங்கி மீண்டும் விளையாட வந்த ஷரபோவா பெரிதாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினா யார் அது?
சச்சின் தெண்டுல்கர் பற்றி கேள்வி இவரிடம் கேட்கப்பட்ட போது சச்சின் யார் என்றே தெரியாது என்று சொல்லி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.
(இந்தியா வந்த அமெரிக்க அதிபரே சச்சின் தெண்டுல்கர் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது).
ஷரபோவா ரசிகர் படை
2006 ஆண்டு யு.எஸ் ஓபன், 2008 ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன், 2012 மற்றும் 2014 ஆண்டு ப்ரெஞ்சு வென்றவர் மரியா ஷரபோவா.
தனது 18 வயதில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பெற்றார். இவருக்கு என்று உலகில் ரசிகர் பட்டாளமே உண்டு.
இவருக்காகவே டென்னிஸ் பார்த்தவர்களும் நிறைய உண்டு என்றும் கூட சொல்லலாம். பிப்ரவரி 2007 முதல் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியல்
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் அதிக சம்பளம் வாங்கும் 100 பேர் கொண்ட பட்டியலில் தடகள வீரராக தொடர்ந்து 11 ஆண்டுகள் இவர் பெயர் இடம் பெற்றது.
மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில் தரப்படும் விருதில் ஏழு விருது பெற்றுள்ளார். நேற்று பிப்ரவரி 26 தனது ஒய்வை அறிவித்தார்.