AUSW vs SAW; மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா. மகளிர் உலககோப்பை போட்டி அரையிறுதியை தாண்டியுள்ளது.
இன்று இரண்டு அரையிறுதி போட்டியும் ஒரே மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது.
ஆனால் மழை குறிக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டது. புள்ளிபட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.
வேதனையுடன் இங்கிலாந்து அணி வெளியேறியது. மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லன்னிங் 49 ரன்கள், மூனே 28 ரன்கள், ஹீலி 18 ரன்கள் மற்றும் ஹயனஸ் 17 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேளர்க் 3 விக்கெட்டும், லபா மற்றும் ஹாகா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்யும் முன்னதாக மழை மீண்டும் குறுக்கிட்டது. சிறிது நேரம் மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
13 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென்னாபிரிக்க அணிக்கு 98 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
13 ஓவர்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிஎல் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக வால்வேர்ட் 41 ரன்கள், சுனே லோஸ் 21 ரன்கள், நைகிரேக் 12 ரன்கள், லீ 10 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஸ்கட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மேக் லெனிங் வாங்கினார்.
முதல் ஆட்டத்தில் போல் இரண்டாவது ஆட்டத்தில் மழை குறுக்கீடும் இதனால் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
உலகக் கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அந்த நாட்டு ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தியுள்ளது..
இறுதிப் போட்டி வருகிற மார்ச் 8-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது.