Home ஜோதிடம் 6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

549
0
6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil
astrology horoscope background

6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். பணியில் வெற்றி நிச்சயம்.

துணையுடன் நல்ல நிலை இருக்கும். தன வரவு மற்றும் செலவு சமமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மகாலட்சுமிக்கு விளக்கு ஏற்றி வர நன்மை கிடைக்கும்.

ரிஷபம் ராசிபலன்

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். மனதில் தெளிவு வேண்டும். பணியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்பத்தில் உற்சாகம் பெருகும். நெருங்கிய உறவினர்கள் மூலம் ஆலோசனைகள் கிடைக்கும்.

பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துர்கைக்கு விளக்கேற்றி வர நற்பலன் கிடைக்கும்.

மிதுன ராசிபலன்

உங்கள் திறமையை வெளிபடுத்த ஏதுவான நாளாக இருக்கும். பணியாளர்களிடம் சகஜமான சூழல் நிலவும்.

காதலை வெளிபடுத்த ஏதுவான நாள். நிதி விஷங்கள் சாதகமான இருக்கும். நல்ல பலத்துடன் இருப்பீர்கள். அற்புதமான நாளாக அமையும்.

சுக்ர பகவானை வழிபட நன்மைகள் கூடும்.

கடக ராசிபலன்

செயலில் அக்கரை காட்டாமல் இருப்பீர்கள். மந்தமான சூழல் நிழவும். பணியில் சுமூகமான சூழ்நிலை இருக்காது.

காதலில் சிக்கல் ஏற்படும். பணத்தை கவனமாக செலவிடவும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். கருடனிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம் ராசிபலன்

உங்கள் முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருங்கள். மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி விடுங்கள்.

மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்டமான நிதி நிலை இருக்காது. மனதில் உற்சாகமாக இருப்பீர்கள்.

சிவபெருமானை வழிபட கவலைகள் குறையும்.

கன்னி ராசிபலன் 

இன்று சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

தங்கள் துணையிடம் புரிதல் நன்றாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெருமாளிற்கு விளக்கேற்றி வர நன்மைகள் கூடும்.

துலாம் ராசிபலன்

இன்று பொன்னான நாள். நன்றாக ஆற்றலுடன் இருப்பீர்கள். பணி மாறுதல்கள் இருக்கலாம்.

மேலதிகாரிகளிடம் அங்கீகாரம் கிடைக்கும். காதல் மேம்படும். நிதியில் எந்த பாதிப்பும் இல்லை. ஆரோக்கியத்தில் குறையில்லை. சுக்ர பகவானை வழிபட கூடுதல் பலன் உண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று அசௌகரியமான நாளாக இருக்கும். பணியில் ஆக்கப்பூர்வமான செயல்கள் இருக்காது. திருமண உரையாடல்களை தள்ளி போடவும். தன வரவு லாபகரமாக இருக்காது.

தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தன்வந்திரியை விளக்கேற்றி பூஜியுங்கள் நல்ல பலன் உண்டு.

தனுசு ராசிபலன்

இன்று லாப நஷடம் கலந்த நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் நல்ல பலன் தரும்.

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. துணையிடம் வேண்டாத மோதல்கள் வரலாம். பண வரவு மகிழ்ச்சிகரமாக இல்லை.

வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். சுக்ர பகவானிற்கு விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று வளர்ச்சிகள் நன்றாக இருக்கும். சுய முன்னேற்றம் இருக்கும். உழைத்து வெற்றி பெறலாம்.

குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும். உறவினர் வர வாய்ப்புண்டு. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பெருமாளிற்கு விளக்கேற்றி வர கூடுதல் பலன் கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று விரக்தியான நாளாக இருக்கும். பணி சுமை அதிகமாக இருக்கும். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். துணையுடன் மோதல்கள் இருக்கும்.

பண வரவு போதுமான அளவு இருக்காது. பதட்டை தவிர்க்க யோகா அவசியம். பெருமாளிற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் வரவும்.

மீனம் ராசிபலன் 

இன்று யோசித்து விவேகத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்கள் மீது கோபம் கொள்வதை தவிர்க்கவும்.

பணியில் திட்டமிடல் அவசியம். துணையிடம் சுமூகமான நிலை இருக்கும். வீண் செலவை தவிர்க்கவும்.

ஆரோக்கியம் சாதாரண நிலையில் இருக்கும். அம்பிகை தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

6/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleHappy birthday selvaraghavan: செல்வராகவன் எனும் ஜீனியஸ்
Next articleAUSW vs SAW: மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here