2 ஓவர் 55 ரன்கள் என காட்டுத்தனமாக வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்கினர் ரிஷப் பண்டும், ஸ்ரேயாஸ் அய்யரும்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியை வென்ற களிப்பில், முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி மொக்கையாக தோற்றுப்போனது.
அடுத்து நடக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியும்.
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்-யை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல்-ரோஹித் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஆரம்பம் முதலே வெளுக்கத் துவங்கினர்.
இருவரும் நிலைத்து ஆடி சதம் அடித்தனர். 159 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் ஒரு இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா அவுட் ஆகினார்.
அடுத்து வந்த விராட் கோலி வந்தவுடனே டக் அவுட். 102 ரன்களில் கே.எல்.ராகுல் விக்கெட்டும் காலி.
இனி இந்திய அணியின் ரன் வேகம் கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஜோடி காட்டுத்தனமாக அடிக்க ஆரம்பித்தனர்.
46-வது ஓவரில் பண்ட் சிக்சர்கள் அடிக்க, 47 ஓவரில் தன் பங்குக்கு ஸ்ரேயாஸ் அய்யர் சிக்சர் மழை பொழிந்து அரைச்சதம் கடந்தார்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 387 என்ற மாபெரும் வெற்றி இலக்கை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு நிர்ணயித்தது.
பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.