Home நிகழ்வுகள் தமிழகம் சாந்தி பிரியா கொலை: ஒருபுறம் திமுக, மறுபுறம் செம்மரக்கடத்தல்

சாந்தி பிரியா கொலை: ஒருபுறம் திமுக, மறுபுறம் செம்மரக்கடத்தல்

334
0
சாந்தி பிரியா கொலை வழக்கு முனிவேல் செம்மரக்கடத்தல்

சாந்தி பிரியா கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் முனிவேல் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்ற மாதம் ஆந்திரக் காட்டிற்கு செம்மரம் வெட்ட இளையகுமார், பழனி, சென்றாயன், பழனி, இளையராஜா, சஞ்சய், கிருஷ்ணமூர்த்தி,  ஆகிய 7 பேரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதில் புரோக்கராக செயல்பட்ட சீனிவாசன் பெரும் பங்கு பணத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு குறைந்த பணமே கொடுத்துள்ளார்.

நீண்ட நாட்களாக அந்த ஏழு நபர்களும் மீத பணத்தை சீனிவாசனிடம் கேட்டு வந்துள்ளனர். ஆனால் சீனிவாசன் பாக்கி பணத்தை தராமல் இழுத்தடித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏழு பேரும் டிசம்பர் 3-ம் தேதி சீனிவாசன் வீட்டிற்கு சென்று அவரை கடத்த முயன்று உள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சாந்தி பிரியா கடத்தல் நபர்களை தடுக்க முயன்று உள்ளார்.

சாந்தி பிரியாவின் கழுதை நெரித்து, தலையை சுவற்றில் பலமாக முட்டியதில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் முனிவேல் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுக கட்சியில் உள்ளார். ஒரு பக்கம் கட்சி மறுபக்கம் செம்மரக் கடத்தல் என வலம் வந்துள்ளார் முனிவேல்.

Previous articleகுடியுரிமை சட்டம்: வாபஸ் பெறப்போவதில்லை – அமித்ஷா
Next article2 ஓவர் 55 ரன்கள்: காட்டுத்தனமாக அடித்த இந்திய வீரர்கள்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here