2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற நாள் இன்று.
1983 உலககோப்பை
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா பெரிதாக சோபிக்கவில்லை.
2003
2003 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
2011 உலககோப்பை
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை நடந்தது. இந்த உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கு பெற்றது.
குரூப் ஏ வில் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா, கனடா, ஜிம்பாப்வே அணிகளும் மோதின.
காலிறுதி போட்டிகள்
இதில் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
குரூப் பி வில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் பங்கு பெற்றன.
இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வியும், இங்கிலாந்து அணியுடன் சமம் செய்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.
இதில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும் அரை இறுதியில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது.
அரையிறுதி போட்டிகள்
முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதின இதில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த போட்டியை இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று 2013 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதுவரை உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றதில்லை. இந்த சாதனை 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை வரை தொடர்கின்றது.
இறுதி போட்டி
2011 ஏப்ரல் 2 ஆம் தேதி, 43000 மக்கள் கூடிய மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்கியது.
இந்தியாவும் இலங்கையும் தலா ஒரு முறை மட்டுமே உலக கோப்பையை வென்று இருந்தது.
தோனி, கபில்தேவ் போல் கோப்பையை வெல்வாரா? இல்லை சங்ககரா, அர்ஜுனா ரணதுங்கா போல் கோப்பையை வெல்வாரா? என்ற ஆவல் இருநாட்டு ரசிகர்கள் மத்தியில்.
இலங்கை 274
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக மகிளா ஜெயவர்தனே சதமடித்து 103 ரன்கள் எடுத்தார்.
குமார் சங்ககரா 48 ரன்கள், தில்சன் 33 ரன்கள், குலசேகரா 32 இருந்து எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜாகிர் கான் மற்றும் யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சேவாக் டக் அவுட்
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோப்பையை வெல்ல சச்சின், சேவாக் களம் இறங்கினார்கள்.
மலிங்கா வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் சேவாக் தனது விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
கெளதம் 97
கௌதம் கம்பீர் உடன் இன்றையை இந்திய நட்சத்திர வீரர் கேப்டன் விராட் கோலி கூட்டணி அமைத்தார்.
இந்திய அணி 117 ரன்கள் இருந்தபொழுது விராட் கோலி 35 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
எப்பொழுதும் ஆறாவது வீரராக களமிறங்கும் தோனி அன்று ஐந்தாவது வீரராக களமிறங்கினார். கௌதம் கம்பீரும் தோனியும் ஆட்டத்தை இந்திய பக்கம் திருப்பினார்கள்.
மூன்றே ரன்னில் சதத்தை தவறவிட்ட கௌதம் கம்பீர் 97 ரன்னில் பெரரா வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார்.
தோனி சிக்ஸ், இந்தியா வெற்றி
டோனியின் யுவராஜ் சிங்கும் கூட்டணி அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்கள்.
இந்தியாவின் பெஸ்ட் பினிஷேர் எம்எஸ் தோனி வெற்றிக்கு 3 ரன்கள் தேவை இருந்த பொழுது, குலசேகரா வீசிய 49.2 வது ஓவரில் சிக்ஸர் தூக்கி இந்தியா இரண்டாவது முறை கோப்பையை வென்று கொடுத்தார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக கௌதம் கம்பீர் 97, எம்எஸ் தோனி 91, வீராத் கோலி 35 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் தில்சன் மற்றும் திசாரா பெரேரா தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்கள்.
தோனி அடித்த கடைசி அந்த சிக்சருக்கு, ரவி சாஸ்திரியின் வர்ணனையும் இன்றுவரை இந்திய ரசிகர்கள் கேட்டால் புல்லரித்துப் போகும்.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை தோனியின் தலைமையில் வென்றது.
ஆனந்த கண்ணீர்
தோனியின் கண்களிலும், சச்சினின் கண்களிலும், மற்ற வீரர்களின் கண்களிலும் ரசிகர்கள் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் ஆறாக ஓடியது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள் இது ஒன்றுக்காக மட்டுமே.
1992 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை சச்சின் டெண்டுல்கரின் நிறைவேறாத உலக கோப்பை கனவை எம்எஸ் தோனி வாங்கி கொடுத்தார்..
இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிருஷ்ணனை இந்திய வீரர்கள் தோளில் சுமந்தார்கள்.
இறுதி உலக கோப்பை ஆடிய சச்சின் டெண்டுல்கரை இந்திய வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றி வந்தார்கள்.
ஆட்டநாயகன்
ஆட்ட நாயகன் விருதை மகேந்திர சிங் தோனியும், தொடர் நாயகன் விருதை யுவராஜ் சிங்கும் பெற்றனர்.
இந்த உலகக் கோப்பையை வாங்கிய பிறகு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும், மத்திய அரசும், பல மாநில அரசும் வீரர்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்தனர்.
இந்த போட்டியை 135 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பார்த்தார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பல இடங்களில் டிவி தெருக்களிலும் வீடுகளிலும் வெளியில் வைத்து ரசிகர்கள் நின்றும் நின்றபடியே பார்த்தார்கள்.
இந்தியா விழா கோலம்
இந்தியா முழுவதும் விழாக்கோலம் பூண்டது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
2007 ஆம் ஆண்டு உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா வெளியேறிய போது ரசிகர்கள், வீரர்களின் வீட்டை உடைத்தார்கள்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வாங்கியவுடன் பலரின் கனவு நாயகனாக மகேந்திர சிங் தோனி மாறினார்.