உலகம் முழுவதும் கொரோனா நோய் அதி வேகமாக பரவி வருவதால், பல வகையான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் , சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ஒத்தி போட பட்டுள்ளது. கிரிக்கெட் ஐபில் கூட நடக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது , சர்வதேச டுவெண்ட்டி டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டிகள் கூட திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடக்க வாய்ப்பு குறைவு.
இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 29 தேதி முதல் ஜூலை 12 தேதி வரை இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருந்த புகழ் பெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான “ விம்பிள்டன்” (Wimbledon) போட்டிகளை ரத்து செய்வதாக ஏஇஎல்டிசி ( AELTC –The All England Lawn Tennis and Croquet Club ) அறிவித்து உள்ளது!
இந்த அறிவிப்பு டென்னிஸ் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. இதுவரை விம்பில்டன் போட்டிகள் முதல் உலகப்போர் ( 1915-1918 ) , மற்றும் இரண்டாம் உலகப் போர் ( 1942-1945 ) ஆகிய தவிர்க்க முடியாத சூழ் நிலைகளில் மட்டுமே தள்ளிபோட பட்டுள்ளது.
விரைவில் கொரோனா தோற்று விலகி மீண்டும் விம்பில்டன் போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே அணைத்து டென்னிஸ் ரசிகர்கள் விருப்பம்.
சா.ரா.