இந்தியா ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டம், இந்தியாவில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா அணி மிக ஆர்வமாக உள்ளது.
ஆஸ்திரேலியா பயணம் செய்யும் இந்தியா வருகிற அக்டோபர் மூன்று டி20 போட்டி, அதை தொடர்ந்து டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா இந்தியா பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டி விளையாடவுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலக கோப்பை தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது. தவிர ரசிகர்கள் இல்லாமல் தொடரை நடத்த திட்டமிட்டுகின்றனர்.
நிதி நெருக்கடியால் திணறி வருகிறது தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள். இதனால் இந்தியாவுடன் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் கூடுதலாக ஒரு போட்டி நடத்த முடிவு.
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச தொடர்கள் பாதிக்கப்பட்டால், எங்களது வருமானத்திலும் பிரச்னை வரும். வரும் இந்திய தொடருக்கு முன் எங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது உண்மையில் அதிர்ஷ்டம் தான்.
இத்தொடரை ஐந்து போட்டிகள் கொண்டதாக மாற்றுவது குறித்தும் யோசிக்கிறோம். இதற்கான வாய்ப்பையும் மறுக்க முடியாது என கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.