Home நிகழ்வுகள் உலகம் கோபி பிரையன்ட்: கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் வரலாறு

கோபி பிரையன்ட்: கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் வரலாறு

0
1229
கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் கோபி பிரையண்ட் பிரையன்ட்

கோபி பிரையன்ட்: கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் வரலாறு. யார் இந்த கோபி பிரையன்ட்? Who Is Kobe Bryant History Tamil.

முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பிரையன்ட். அமெரிக்காவில்   லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்  (Los Angeles Lakers), சென்னை கிங்ஸ் போல இது ஒரு விளையாட்டு குழு.

இந்த  அணியிடம்  விளையாடிய இவர்; ஐந்து  என்.பி.ஏ (NBA)  NATIONAL BASKET BALL ASSOCIATION பட்டங்களை வென்றார்.

கோபி பிரையன்ட் உலகின் மிகச்சிறந்த கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர். அவர் ஜனவரி 26, 2020 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் சோகமாக இறந்தார்.

யார் இந்த கோபி பிரையன்ட்? Who is Kobe Bryant

இந்தியாவில் கிரிக்கெட், இங்கிலாந்தில், ஸ்பெயினில், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து  ரசிகர்கள் இருப்பது போல  அமெரிக்காவில் கூடைப்  பந்தாட்ட விளையாட்டுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு.

கோபி பிரையன்ட் தனது ஆரம்ப ஆண்டுகளை இத்தாலியில் கழித்தார், மேலும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து  நேராக NBA-வில் சேர்ந்தார்.

பிரையன்ட் ஐந்து என்.பி.ஏ ( Dear Basketball ) சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு மிக உயரிய விருதானா எம்விபி (MVP) விருதை லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியில் விளையாடி  வென்றார்.

சில வருடங்கள்  காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், டிசம்பர் 2014-இல் NBA டைம் ஸ்கோரிங் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார்; கூடைப்பந்து சகாப்தம்  மைக்கேல் ஜோர்டானை விட  முன்னேறினார்.

தனது இறுதி ஆட்டத்தில் 60 புள்ளிகளைப் பெற்ற பின்னர் 2016-இல் முழுமையாக ஓய்வு பெற்றார்.

2018-ஆம் ஆண்டில் பிரையன்ட் எழுதிய, Dear Basketball என்ற குறும்படத்திற்கு சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் அகாடமி விருது கிடைத்தது.

Dear Basketball, கோப் பிரையன்ட்-யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தை அனிமேஷன் செய்து இயக்கியவர் Glen Keane ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை (Kobe Bryant History Tamil)

இவருடைய முழுப்பெயர்  கோபி பீன் பிரையன்ட் ஆகஸ்ட் மாதம்  23-ம் தேதி 1978-ம் ஆண்டு  அன்று, அமெரிக்கா மாநிலம் பென்சில்வேனியாவில்  பிறந்தார்.

இவருடைய அப்பா ‘ஜோ ஜெல்லிபீன் பிரையன்ட்’. இவரும்  மிகப்  பிரபலமான முன்னாள் NBA  கூடைப் பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அப்பா  1984-ஆம் ஆண்டில், தனது NBA வாழ்க்கையை முடித்த பின்னர், தன்  குடும்பத்தை இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் இத்தாலிய லீக்கில் விளையாடினார். ஷாயா மற்றும் ஷரியா ஆகிய இரு தடகள மூத்த சகோதரிகளுடன் இத்தாலியில் வளர்ந்த பிரையன்ட் கூடைப்பந்து மற்றும் கால்பந்து இரண்டிலும் தீவிர வீரராக இருந்தார்.

1991-ஆம் ஆண்டில் மீண்டும் இவர்களது குடும்பம் அமெரிக்கா மாநிலம்  பென்சில்வேனியாவிற்கு திரும்பியது.

பிரையன்ட் லோயர் மெரியன் என்ற உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து அணியில் சேர்ந்தார்.  தனது அணியை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மாநில சாம்பியன்ஷிப்பிற்கு அழைத்துச்சென்றார். எப்போதும் NBA மீது ஒரு தீராத காதலை வைத்து  தீவிரமாக விளையாடி வந்தார்.

மிகஅதிக  SAT மதிப்பெண்களை உயர்நிலைப் பள்ளியில் எடுத்திருந்தாலும், கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் பிரையன்ட்  நேராக NBA-க்குச் செல்ல முடிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு NBA-வில்  13  ஒட்டுமொத்த  அதிகாரிகளும் ஒரு மனதோடு  இவரை   சார்லோட் ஹார்னெட்ஸால்  அணியில்  தேர்ந்தெடுத்தனர். பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் நிறுவனத்திற்கு மாறினார்.

NBA வெற்றியின்  புள்ளிவிவரங்கள்

லேக்கர்களுடனான தனது இரண்டாவது சீசனில், 1998-ம் ஆண்டு ஆல்-ஸ்டார் கேம் என்ற விருதை 19 வயதில் பெற்றார். NBA வரலாற்றிலே மிக இளம் வயதில் இப்பட்டதைப் பெற்றது இவர் மட்டுமே.

2002 முதல் 2004 வரை பிரையன்ட் அணி தொடர்ந்து மூன்று முறை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஷாகில் ஓ’நைல் மற்றும் பிரையன்ட் இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.

அதனால், Shaquille O’Neal-வுடன் இணைந்து பிரையன்ட் அடிடாஸ், ஸ்ப்ரைட் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2004-ஆம் ஆண்டில் Shaquille O’Neal வெளியேறிய பிறகும் தனது  லேக்கர்ஸ்  அணியை  மிகத்  திறமையாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2006-இல் டொராண்டோ ராப்டர்கள் அணிக்கு எதிராக இவர் மட்டுமே 81 புள்ளிகளை எடுத்தார்.  இது NBA வரலாற்றில் தனிநபராக எடுக்கப்பட இரண்டாவது  அதிக ஸ்கோர்.

2008-ஆம் ஆண்டில், பிரையன்ட் மிகவும் மதிப்புமிக்க வீரராகப் பெயரிடப்பட்டார் மற்றும் அவரது அணியை NBA இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் பாஸ்டன் செல்டிக்ஸ் அணியிடம்  தோற்றனர்.

2009 NBA இறுதி ஆட்டங்களில் லேக்கர்ஸ், ஆர்லாண்டோ மேஜிக்கை அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

தனது  நண்பரும் இசை சூப்பர் ஸ்டாருமான மைக்கேல் ஜாக்சனைக் கவுரவிக்கும் விதத்தில்  சமூக சேவையையும்   செய்தார்.

பிரையன்ட் 2008 மற்றும் 2012 யு.எஸ் ஒலிம்பிக் அணிகளில் விளையாடினார், அணியின் தோழர்களான கெவின் டுரான்ட், லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் கார்மெலோ அந்தோணி ஆகியோருடன் தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஏப்ரல் 2013-இல் அகில்லெஸ் என்ற தசைநார் நோயால் பிரையன்ட் பாதிக்கப்பட்டார். இதனால் 2013-2014-ம் ஆண்டு போட்டியின்போது முழங்காலில் முறிவு ஏற்பட்டது.

ஜனவரி 2015-இல் மீண்டும் விளையாட முயற்சி செய்தபோது காயம் காரணமாகத் தொடர முடியவில்லை . அவருடைய விளையாட்டு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

ஓய்வு அறிவிப்பு 

நவம்பர் 2015 வருட முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்விற்குப்பிறகு, “20 ஆண்டுகள் எவ்வளவு விரைவாகச் சென்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் கூறினார்.

தி பிளேயர்ஸ் ட்ரிப்யூன் இணையதளத்தில், “என் இதயத்தின் மிக வேகமான துடிப்பைத் தங்கிக்கொள்ளமுடியும். என் மூளையின் வலியைப் பொறுத்துக்கொள்ளமுடியும். இந்த உடல் விடைபெற வேண்டிய நேரம் இதுதான்” என்று எழுதினார்.

சமூகப்பணி 

இவருடைய பெரும் முயற்சியால் சக வீரர்களுடன் இணைத்து அறக்கட்டளை உருவாக்கி பள்ளிகளுக்கு உதவினார். கூடைப்பந்து  பயிற்சி அளித்து வருடம் தோறும்  கோடைக்கால முகாமையும் நடத்தி வருகிறார்.

Who Is Kobe Bryant Kobe Bryant History Tamilபிரையன்ட் குடும்பம்

பிரையன்ட் ஏப்ரல் 2001-இல் 19 வயதான வனேசா லெய்னை மணந்தார். இவர்களுக்கு  நான்கு மகள்கள். நடாலியா டயமண்டே (பிறப்பு  2003), கியானா மரியா-ஓனோர் (பிறப்பு  2006), பியான்கா (பிறப்பு  2016) மற்றும் கேப்ரி ( பிறப்பு 2019).

பிரையன்ட் இறப்பு

பிரையன்ட், 2020 ஜனவரி 26-ம் நாள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதியான கலாபாஸில் ஹெலிகாப்ட்டர் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், பிரையன்ட் உட்பட 9 பேர் இறந்தனர். இதில் பிரையன்டின் 13 வயது மகள் கியானா “ஜிகி”, மற்றொரு மகள் அலிஸா, பிரையன்ட் மனைவி கெரி மற்றும் ஜிகியின் கல்லூரி பேஸ்பால் பயிற்சியாளர் ஜான் அல்தோபெல்லி ஆகியோரும் இறந்தனர்.

ஹெலிகாப்டர் கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியில் இருந்து ஆயிரம் ஓக்ஸுக்கு சென்று கொண்டிருந்தது. (Orange County to Thousands Oaks) அங்கு பிரையன்ட், மாம்பா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஒரு போட்டி ஆட்டத்தைப் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஹெலிகாப்ட்டர் விபத்திற்குள்ளாகி கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் பிரையன்ட் இறந்துவிட்டார். உலகம் முழுவதும் உள்ள கூடைப்  பந்தாட்ட ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here