Home சிறப்பு கட்டுரை தூக்கம் தரும் பாடல்; தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தை

தூக்கம் தரும் பாடல்; தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தை

818
1
தூக்கம் தரும் பாடல் தாலாட்டு

தூக்கம் தரும் பாடல்; தூக்கம் வரும் பாட்டு; தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தை; இதுவே, வாழையடி வாழையாய் கிடைக்கும் தூக்க மருந்து. முன்னோர்கள் விட்டுச்சென்ற மருந்து.

இன்பம் துன்பம் என்ற இரண்டையும் மறந்து, அமைதியான நிலைக்கு அழைத்துச் செல்லுவதே தூக்கம். இதனை விரும்பாதவர் எவரும் இல்லை. ஆனால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் இங்கு அதிகம்.

தூக்கமின்மைக்குச் செய்யப்படும் செலவுகள்

தூக்கம் வரும் பாட்டு தூங்கும் குழந்தை

இப்படிப்பட்ட தூக்கத்தைப் பெறுவதற்காக சிலர் மருத்துவரைத்தேடி பல செலவுகளைச் செய்தும் தூக்கத்தைப் பெறமுடியாமல் தவிக்கிறார்கள்.

மருத்துவரை அணுகாமல் செலவுகள் செய்யாமல், தூக்க மாத்திரைகள் உபயோகிக்காமல் நிம்மதியான தூக்கத்தைப்பெற முடியும்.

இது சாத்தியமா??? என்பது தானே உங்கள் கேள்வி. ஆம் சாத்தியம் தான். தூக்கத்தைப் பற்றியும் அதை எளிதாய் பெறுவதைப் பற்றியும் இங்கு காணலாம்.

ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் தூக்கம்

தூக்கம் வரும் பாட்டு

பொதுவாக தூக்கம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு பகுதி. நாம் நாட்களைப் புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைச் செய்வதற்கும் தூக்கம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது.

தூக்கத்தின் அவசியம்

பொதுவாகக் குழந்தைகள் 14 மணி நேரமும், நடுத்தர வயதுடையவர்கள் 7 முதல் 9 மணி நேரமும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 7 மணி நேரமும் தூங்குவது அவசியம்.

ஏனென்றால், மனிதனின் செயல்திறன் என்பது அவனின் மூளையைப் பொறுத்தே அமைகிறது. அந்த மூளைக்கு ஒய்வு கொடுப்பதே தூக்கம் தான்.

அப்படிப்பட்ட தூக்கம் சரியாக அமையவில்லை என்றால் தலைவலி, அளவில்லாத கோபம் ஏற்படுத்தும்.

தூக்கமின்மைக்கு காரணம்

ஏன் தூக்கம் சிலருக்கு சரியாக அமைவதில்லை? ஏனென்றால், தேவையில்லாத மன உளைச்சல், வயதுக்கு மீறிய அளவற்ற சிந்தனை, வேளையில் ஏற்படும் அதிகப்படியான வேளை அழுத்தம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க சிலர் ஊர் சுற்றுகின்றனர். தேவையில்லாத தீய பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். சிலர் தற்கொலையும் செய்துகொள்ள முயற்சி செய்கின்றனர்.

இரவின் செலவு தூக்கம்

தூக்கம் வரவழைக்கும் பாடல்கள்

பொதுவாக இரவு என்பதை தூக்கத்தில் செலவு செய்தால் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கு முதலில் நம் மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி இரவில் மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு சென்றால் தூக்கமின்மையைத் தவிர்க்கலாம்.

தாலாட்டு மூலம் தூங்கும் குழந்தை

பொதுவாகக் குழந்தைகளை தூங்க வைப்பது கடினம். அந்தக் கடினமான ஒன்றை தாலாட்டு என்ற பாட்டு மூலம் சாத்தியமாவதைக் கண்டிருப்போம்.

அதுதான் தூக்கமின்மைக்கு உண்மையான தூக்க மருந்து என்பதை பலர் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் அதுதான் உண்மை.

சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிக்கொண்டு இருப்பார்கள். பாட்டு காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் சத்தம் கேட்பதையும் மறந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

அதுவே ஒரு சிறந்த இசைக்கு இருக்கும் வலிமை. நல்ல மெல்லிய இசை கொண்ட பாடல்களைக் கேட்பதன் மூலம் எளிதில் தூக்கத்தை அடையாலாம்.

தூக்கமின்மைையிலிருந்து விடுபட எளிதான வழி

தாலாட்டு உண்மையான தூக்க மருந்து

எப்படி என்றால் இயல்பாகவே இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்பார்கள். இதனை அறிந்த அன்னைமார்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்க தாலாட்டு என்னும் பாட்டை பாடுகிறார்கள்.

இசை என்பது நம் கவலைகளை மறக்கடித்து மனதினை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நாம் முன்பு பார்த்தது போல் மனதினை அமைதிப்படுத்தி தூக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவை.

தூக்கம் வரும் பாட்டு, தூக்கம் தரும் பாடல் ஏராளம் இணையத்தில் உள்ளது. அதை கேட்டு தூக்க நிலையை அடைய முயற்சி செய்வதே சிறந்த வழி.

அதனால் தூங்கச் செல்லும் முன் ஹெட்செட் மூலமாக ஒரு 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பாட்டு கேட்டு விட்டு தூங்கச் சென்றால் மனம் அமைதி நிலைக்குச் சென்றுவிடும். தூக்கமின்மையையும் நாம் தவிர்த்துவிடலாம்.

Previous articleசியாமளா நவராத்திரி என்றால் என்ன? அதன் சிறப்புகள்!
Next articleகோபி பிரையன்ட்: கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் வரலாறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here