Home வரலாறு ஆஸ்திரேலியா அணிக்கு நடந்த வேதனை- உலக சாதனை மறக்க முடியுமா இன்று?

ஆஸ்திரேலியா அணிக்கு நடந்த வேதனை- உலக சாதனை மறக்க முடியுமா இன்று?

728
0

ஆஸ்திரேலியா அணிக்கு நடந்த வேதனை – மறக்க முடியுமா இன்று? கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் முறியடிக்கப்பட்ட உலக சாதனை.

ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய உலக சாதனையை அதே நாளில் நான்கு மணி நேரத்தில் முறியடித்து உலக சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்கா அணி.

ஆஸ்திரேலியா vs தென்ஆப்ரிக்கா

14 வருடத்திற்கு முன்பு 2006-ஆம் ஆண்டு இதே நாளில் ஜோகனஸ்பார்க் நகரில் நியூ வன்டர்ஸ் மைதானத்தில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது.

ஏற்கனவே நடந்த நான்கு போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளை வென்றது. இறுதி போட்டிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்தனர்.

டாஸ் வென்ற பான்டிங்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். கில்கிறிஸ்ட் மற்றும் கேட்டிச் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள்.

இருவரும் சேர்நது 97 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்த தென் ஆப்பிரிக்கா அணி 16 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

அடுத்து களமிறங்கிய ரிக்கி பான்டிங் விஸ்வரூபம் எடுத்தார். பேய் இன்னிங்ஸ் ஆடினார். நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டார். 105 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார், 13 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.

இதுவே இவரது ஒரு நாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

7 வருட உலக சாதனை

ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்து 7 வருட உலக சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன்னாள் ஒருநாள் போட்டியில் 1999-ஆம் ஆண்டு இலங்கை அணி கென்யா அணிக்கு எதிராக 399 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்து வந்தது.

ஆஸ்திரேலியா அதிகபட்சமாக பான்டிங் 165 ரன், ஹஸ்ஸி 81 ரன், காட்டிச் 79 ரன், கில்கிறிஸ்ட் 5 ரன், சைமன்ட்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் சோர்வு அடைந்து பந்து வீசினர். டேலிமெக்ஸ் இரண்டு விக்கெட்டும், ஹால் மற்றும் நிட்னி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இமாலய இலக்கு, பந்து வீச்சில் சோர்வு, சொந்த ஊர் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என பலரும் கருதினார்கள்.

ஸ்மித், கிப்ஸ் ருத்ரதாண்டவம்

தென் ஆப்பிரிக்கா அணி இமாலய இலக்கை துரத்த தயாரானார்கள். 3 ரன் இருந்த போது தென் ஆப்பிர்க்கா அணி முதல் விக்கெட்டான டிப்பனரை இரண்டாவது ஓவரில் இழந்து அதிர்ச்சியளித்தது.

ஆஸ்திரேலியா சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என எண்ணியது. இங்கு தான் மூன்றாவதாக களமிறங்கிய கிப்ஸ், ஆஸ்திரேலியாவை வைத்து செய்ய போகிறார் என்று யாருக்கும் தெரியாது.

ஸ்மித் மற்றும் கிப்ஸ் கூட்டணி அமைத்து அணியை வெற்றி பாதைக்கு மாற்றினார்கள். 190 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா தனது இர்ணடாவது விக்கெட்டான ஸ்மித்தை இழந்தது, அடுத்து வந்த ஏபிடி வில்லியர்ஸ் அவுட் ஆகினார்.

கிப்ஸ் அடுத்து ஆட பவுச்சர் அவருக்கு துணை நின்றார். கிப்ஸ்  111 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டத்தை மாற்றிய வான்டர்வத்

வான்டர் வாத் இடையில் களமிறங்கி 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் கையில் இருந்த ஆட்டத்தை மார்க் பவுச்சரிடம் கொடுத்தார்.

தென் ஆப்பிர்க்கா அணியின் விக்கெட்டும் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தது. இறுதி ஓவரில் 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை, கைவசம் இரண்டு விக்கெட்கள் உள்ளது.

லீ வீசிய முதல் பந்து பவுச்சர் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினர் ஆன்ட்ரு ஹால், மூன்றாவது பந்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினார் ஹால்.

ரசிகர்கள் பதற்றம், ஆப்பிரிக்கா வெற்றி

இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தின் வெளியே மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

நிட்னி களமிறங்கி நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் பவுச்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தென் ஆப்பிர்க்காவுக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்து கொடுத்தார், ஆவலுடன் காத்து இருந்த உள்ளுர் ரசிகர்கள் வயிற்றில் பாலைவார்த்தார்.

வீரர்கள் மைதானத்திற்கு ஓடி வந்து குதித்து ஆட்டம் போட்டார்கள், ஆஸ்திரேலியா அணி படைத்த உலக சாதனையை நான்கு மணி நேரத்தில் உடைத்து புதிய சாதனை படைத்தது தென்ஆப்ரிக்கா.

தென் ஆப்பிரிக்கா அணியில் கிப்ஸ் 175 ரன்கள் எடுத்தது அவருடைய அதிகபட்ச ரன்னாக உள்ளது. ஸ்மித் 90 ரன்கள், பவுச்சர் 50 ரன்கள்,  வான்டர் வத் 35 ரன்கள் , காலிஸ் 20 ரன்கள், டிவில்லியர்ஸ் 14 ரன்கள், கெம்ப் 13 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் பிராக்கன் 5 விக்கெட்டும்,  சைமன்ட்ஸ் 2 விக்கெட்டும், லீ மற்றும் கிளார்க் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது, கிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகமே கொண்டடியது

கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வந்த ஆஸ்திரேலியாவை யாராவது வெற்றி பெற மாட்டார்களா என்று உலகமே எண்ணிய போது தென் ஆப்பிரிக்கா வென்றது.

ஆஸ்திரேலியாவை தவிர உலகமே கொண்டாடியது, தென் ஆப்பிரிக்கா மட்டுமில்லை, இந்தியாவிலும்  பேசும் பொருளாக மாறியது இந்த போட்டி.

438 போட்டி

இந்த போட்டியை 438 போட்டி என்று பெயர் சூட்டினர் பத்திரிகை மற்றும் ஊடகங்கள். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து 872 ரன்கள் எடுக்கப்பட்டு உலக சாதனையாக இன்றுவரை இருந்து வருகிறது.

இது தான் இன்று வரை மிகப்பெரிய சேஸிங் சாதனை ரன்னாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு அன்று மோசமான நாளாக அமைந்தது.

Previous articleஅடப்பாவிங்களா இருந்த ஒன்றையும் கொன்னுட்டீங்களே?
Next articleநான் கட்சிக்கு மட்டுமே தலைவர்; முதல்வர் இவர் தான் – ரஜினி உருக்கமான பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here