Home வரலாறு தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்து பாம்பை கொன்ற நாள்

தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்து பாம்பை கொன்ற நாள்

568
0
தினேஷ் கார்த்திக் சிக்ஸ்

தினேஷ் கார்த்திக் சிக்ஸ் – சிக்சர் (Dinesh karthik six) அடித்து பாம்பு நடனம் ஆடும் அணியை அதிரவைத்த நாள். இந்தியாவே தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய நாள்.

நிடஹஸ் டிராபி

இந்தியா, இலங்கை, வங்கதேசம் என மூன்று நாடுகள் பங்குபெற்று இலங்கையில் நிடஹஸ் டிராபி நடைபெற்றது.

ஒரு அணி தல இரண்டு முறை, இரண்டு அணிகளுடன் மோத வேண்டும் முதல் லீக் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது, மற்ற மூன்று போட்டிகளிலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வங்கதேசத்துக்கும் இலங்கைக்கும் வாழ்வா சாவா அரையிறுதி ஆட்டம் போல் கடைசி லீக் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை தோல்வி

இலங்கை அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்து தோல்வியை சந்தித்தது வங் தேசத்தின் முகமதுல்லா 18 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்து இறுதிப்போட்டிக்குள் வங்கதேசத்தை நுழைய வைத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவுடன் வங்கதேச அணியின் வீரர்கள் இலங்கை வீரர்களின் ரசிகர்களை சீண்டும் விதமாக வெற்றி கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.

தோனி இனி இந்திய அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் – கூறியது யார்?

நாகினி ஆட்டம்

அதுவும் தலையில் கைவைத்து நாகினி ஆட்டத்தை ஆடி மைதானத்தில் அதகளம் செய்தார்கள். இதைக்கண்ட இலங்கை வீரர்களும் மற்றும் இலங்கை ரசிகர்கள் வெறுப்புடன் வெளியேறினார்கள்.

இறுதி போட்டி

2018-ஆம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி கொழும்பிலுள்ள பரமதேசா மைதானத்தில் இறுதிப்போட்டி மாலை தொடங்கியது.

இந்திய ரசிகர்களை காட்டிலும் இலங்கை ரசிகர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக கொழும்பு மைதானத்தில் கூடினார்கள்.

அன்று வங்கதேசத்தை வச்சி செய்யலாம், நாமும் நாகினி நடனமாடி வங்கதேசத்தை வெறுப்பேற்றலாம் என்ற எண்ணத்தில் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.

இந்தத் தொடரில் மிகப் பெரிய ஜாம்பவான்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி பங்கு பெறவில்லை.

இதனால் ரோகித் சர்மா அணியை வழி நடத்தினார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் விஜய் சங்கர் மற்றும் ஷர்டுள் தாகூர் பாரிவள்ளல் ஆக பந்து வீசினார்கள். இருவரும் சேர்ந்து வங்கதேச அணிக்கு 93 வழங்கினார்கள்.

வங்கதேசம் 166 ரன்கள்

வங்கதேச அணியின் சபீர் ரகுமான் அற்புதமாக ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தி 70 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

வங்கதேசம் அதிகபட்சமாக சபீர் ரகுமான் 77 ரஹீம் 9, இக்பால் 15, முகமது லா 21, மெஹந்தி ஹாசன் 19 ரன்கள் எடுத்தனர்.

இந்திய தரப்பில் சகால் 2 விக்கெட்டும், உடன்கட்டை 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

ரோகித் அரைசதம்

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள்

ஷிகர் தவான் 10 ரன்கள் எடுத்து இருக்கும்போது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால், ரோகித் சர்மா கேப்டன் என்கிற முறையில் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தார்.

அடுத்து வந்த ரெய்னாவும் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ராகுல் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். ரோகித் சர்மா 56 ரன்களில் வெளியேறினார்.

மனிஷ் பாண்டே மற்றும் விஜயசங்கர் பொறுப்புடன் விளையாடுகிறோம் என்ற நோக்கில் டி20 போட்டியை ஒருநாள் போட்டி போல் விளையாடி அணியின் ரன் உயர்வை ஆமை வேகமாக எடுத்துச் சென்றார்கள். மணிஷ் பாண்டே 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தினேஷ் மாஸ் எண்ட்ரி

தினேஷ் கார்த்திக் 18-வது ஓவரில் முதல் பந்தில் களமிறங்கினார், அப்பொழுது அணிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை இருந்தது.

வங்கதேச அணி வீரர் ரூபல் ஹுசைன் 19 ஓவரை வீச, அந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார்.

முதல் பந்தை சிக்சருக்கு அனுப்ப, இரண்டாவது பந்தில் நான்கு ரன்கள் அடித்தார், மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.

நான்காவது பந்தை ரன் எதுவும் எடுக்காமல், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்து, கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தார்.

அந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஒரே ஓவரில் வெளுத்து அணியின் ரன்னை 155 ரன்கள் ஆக உயர்த்தினார்.

இந்தியா வெற்றி

கடைசி ஒரு ஓவரில் 10 ரன்கள் இந்தியாவிற்கு தேவையாக இருந்தது. வங்கதேச அணி வீரர் சௌமியா சர்க்கார் 20 வது ஓவரை வீச வந்தார்.

முதல் பந்தை எதிர்கொண்ட விஜயசங்கர் அகல பந்தாக அமைந்தது மீண்டும் வீச முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

மூன்றாவது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு ரன் எடுத்தார், நான்காவது பந்தை விஜய் சங்கர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

அடுத்த பந்தில் விஜய் சங்கர் சிக்சருக்கு அனுப்பும் விதத்தில் மேலே தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து 19 பந்தில் 17 ரன்கள் வெளியேறினார்.

அடுத்ததாக வாசிங்டன் சுந்தர் களத்திற்கு வந்து பந்துவீச்சு முனையில் இறங்கினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை இருந்தது.

இந்தியா இறுதிப் போட்டியில் வாழ்வா சாவா என்ற கடைசி பந்தை எதிர்கொண்டார் தினேஷ் கார்த்திக்.

நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு சவுமியா சர்க்கார் பந்துவீச ஓடிவந்தார். இலங்கை ரசிகர்களும், இந்திய ரசிகர்களும் எழுந்து நின்றுவிட்டனர்.

வங்கதேசமா? இந்தியாவா? என்று எண்ணிக்கொண்டு சவுமியா சர்க்கார் வீச அதை தினேஷ் கார்த்திக் ஆப் சைடு பிளாட் சிக்சருக்கு தூக்கி, அந்த பந்து இறுதியில் கோட்டை தொடும் வரை பதட்டத்துடன் ரசிகர்கள் பார்க்க, பந்து சிக்சர் ஆக மாறி இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரி என 29 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியா வெற்றி பெற்றதும் விஜயசங்கர் பெருமூச்சுவிட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கையை தினேஷ் கார்த்திக் காப்பாற்றினார்.

வங்கதேச தரப்பில் ரூபல் ஹுசைன் 2 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், இஸ்லாம், ரகுமான், சர்க்கார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ரசிகர்கள் வெறியட்டம்

இந்திய அணி வெற்றி பெற்றதும் இலங்கை ரசிகர்கள் அனைவரும் வங்கதேச அணியை பார்த்து நாகினி நடனமாடி அவர்களின் வெற்றி கொண்டதை அவர்களுக்கு செலுத்தினார்கள்.

ஏற்கனவே தோல்வியடைந்த வேதனையிலிருந்த அவர்கள், ரசிகர்களை பார்த்து மேலும் வேதனை அடைந்தார்கள்.

இது வங்கதேச அணிக்கு தேவையா என்று கேட்டால் தேவைதான் அவர்கள் ஒரு போட்டி வெற்றி பெற்று விட்டாலே மற்றவர்களை மட்டம் தட்டி கொண்டாடுவதிலும், ரசிகர்களை கேலி செய்து கொண்டாடுவதும், புதுமை என்ற பெயரில் கேவலமாக கொண்டாடுவதே கையாண்டு வந்தனர்.

அதற்கு தக்க பதிலடியாக இந்த நிடஹஸ் டிராபி இறுதி போட்டியில் இலங்கை ரசிகர்கள் கொடுத்த பாம்பு நடனமே.

ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கும் தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தரும் வாங்கினார்கள். கோப்பையை ரோகித் சர்மா வாங்கி நம் இந்திய இளம் படை கையில் ஒப்படைத்தார்.

தினேஷ் கார்த்திக், டோனிக்கு முன்னாள் இந்திய அணியில் இடம் பிடித்து நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார்.

Previous article18/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleகொரோனா வதந்தி பரப்பியவர் கைது; போலீஸ் அதிரடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here