Home விளையாட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு புகழும் இங்கிலாந்து வீரர்

தினேஷ் கார்த்திக்கிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு புகழும் இங்கிலாந்து வீரர்

0
308
தினேஷ் கார்த்திக்கிடம்

தினேஷ் கார்த்திக்கிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு புகழும் இங்கிலாந்து வீரர், இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் மோர்கன் புகழாரம்.

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர் மற்றும் திறமை மிகுந்த கேப்டன் ஆவார். அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு என மார்கன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு முதல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமை கொண்ட இவர் கொல்கத்தா அணியில் ஆடிய முன்னாள் வீரர் ஆவார்.

2012ல் ஐ.பி.எல் கோப்பை வென்ற கோல்கட்டா அணியில் இடம் பெற்றவர். 50 ஐ.பி.எல் போட்டிகளில் 854 ரன்கள் எடுத்தார். இரண்டாவது முறையாக மீண்டும் இந்த அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் பற்றி மோர்கன் கூறியதாவது, கார்த்திக் சிறந்த பண்பு கொண்டவரும் துடிப்பாக செயல்படக்கூடியவர் ஆவார்.

இந்திய அணிக்காக விளையாடும் பொழுது  போது சரியாகத் தெரியாது. ஆனால் கோல்கட்டா அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் துடிப்பாக செயல்படுகிறார்.

என்னால் முடிந்த உதவி செய்து அவரிடம் எனக்கு தேவையானதை கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here