Home சினிமா கோலிவுட் தீவிரமாக வீட்டையே சுத்தி சுத்தி வரும் சிம்பு: அப்படி என்னதான் செய்கிறார்?

தீவிரமாக வீட்டையே சுத்தி சுத்தி வரும் சிம்பு: அப்படி என்னதான் செய்கிறார்?

482
0
Simbu Workout Video

Simbu Workout Video; தீவிரமாக வீட்டையே சுத்தி சுத்தி வரும் சிம்பு! சிம்பு வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், சிம்பு வீட்டிலேயே உடற் பயிற்சி செய்து வருகிறார்.

வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தைத் தொடர்ந்து சிம்பு மஹா மற்றும் மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். பல பிரச்சனைகளையும் தாண்டி அண்மையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அதற்குள்ளாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், வீட்டு வேலை செய்வது, சமையல், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, தோட்டத்தை பராமரிப்பது, உடற்பயிற்சி, யோகா செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர். மேலும், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிம்பு வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார். அதுவும் வீட்டையே சுத்தி சுத்தி வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி வரும் நிலையில் நடிகர் சிம்பு இதுவரை எந்த நிதியுதவியும் வழங்கவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கு விரைவில் சிம்பு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற கேள்வி தற்போது எழுகிறது.

இதே போன்று நடிகர் விஜய்யும் கொரோனா நிதியுதவி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த பொருளுதவிகளை தினமும் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக #SilambarasanTR என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here