சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன? சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க காரணம் என்ன?
சீனாவில் ஒருகட்டத்தில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாகப் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய தினம் இது 108 ஆக இருந்தது.
இதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாகவே இருந்தனர். புதிதாக பாதிக்கப்பட்ட 89 பேரில் 86 பேர் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்.
தற்போது மீண்டு சமூக பரவல் மெதுவாக தொடங்கியதாக தெரிகிறது. முடிந்த வரை சீனா அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.