Ramya Pandiyan; இது யாருப்பா? ரம்யா பாண்டியன் சித்தப்பாவா? அப்போ புகழுக்கு என்ன மாமாவா? ரம்யா பாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரம்யா பாண்டியன் தனது சித்தப்பா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு இல்லை.
இதையடுத்து, என்ன செய்வது என்று யோசித்த ரம்யா பாண்டியன் தனது கிளாமர் புகைப்படங்களை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்படி இவர் பதிவிட்ட மொட்டை மாடி ஹாட் போட்டோ ஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களை எகிற வைத்தது. ஒட்டு மொத்த சினிமா சேனல்களும் இவரது பக்கம் திரும்பின.
தொடர்ந்து விதவிதமான கெட்டப்புகளில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் – புகழ் காம்பினேஷனுக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்தது. புகழ் வெளியில் செல்லும் போது கூட ரம்யா பாண்டியன் எங்க? வரவில்லையா? என்றெல்லாம் கேட்பார்களாம்.
இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்டரி ஒர்க் ஆச்சு. எப்போதும், ரம்யா பாண்டியனை தனது டார்லிங், இதயம் என்றுதான் புகழ் அழைப்பாராம்.
ரம்யா பாண்டியன் தனக்கு ஜோடியாக வரவில்லை என்றால் அன்று முழுவதும் புகழுக்கு தூக்கமே வராதாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலுன், ரம்யா பாண்டியனுக்கு இந்நிகழ்ச்சி நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு 9 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகரின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் தனது சித்தப்பா என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியனும் தன் சித்தப்பா அருண்பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஹேண்ட்ஸம் ஜென்டில்மேன் சித்தப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியனுக்கு அருண் பாண்டியன் சித்தப்பா என்றால் புகழுக்கு மாமாவா என்று அவரது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். சிதம்பர ரகசியம், ஊமை விழிகள், விலங்கு, இணைந்த கைகள், ரிஷி, தேவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.