2011 ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக தோனி தலைமையில் உலக கோப்பையை வென்றது.
ஏப்ரல் 2 ஆம் தேதி அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
இந்திய அணியின் இறுதியாட்டத்தில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் தோனி மற்றும் கம்பீர் என்று கூட சொல்லலாம். இருவரும் சேர்ந்து 91 மற்றும் 97 ரன்கள் எடுத்தார்கள்.
2011 உலகக்கோப்பை என்று சொன்னவுடனே தோனி அடித்த கடைசி சிக்சர் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
தோனி பெஸ்ட் பினிஷேர் ஆக வெற்றியின் ரன்னை சிக்ஸராக அடிக்கும் போது இந்தியாவே கொண்டாடியது.
இந்தியா உலகக் கோப்பையை வாங்கி ஒன்பதாவது வருடத்தைக் கொண்டாடும் விதமாக “எஸ்பிஎன் கிரிசின்போ” தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி கடைசியாக அடித்த சிக்ஸர் புகைப்படத்தை பகிர்ந்து
“இந்த ஷாட், மில்லியன் இந்திய மக்களைக் கொண்டாட வைத்தது” என்றும் பதிவிட்டு இருந்தார்கள்
இதை கடுமையாக சாடும் விதமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் இந்த ட்விட்டை ரீட்விட் செய்து
“உலகக்கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியாவும் இந்திய அணியின் பயிற்சியாளர்களும் இணைந்து தான் வென்றார்கள்.
சிக்ஸர் மீதான உங்கள் ஆதித விருப்பத்தை கைவிட வேண்டும்” என்று தன் கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்தன் கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
இதை ஒரு சிலர் ஆதரித்தாலும் பெரும்பாலும் இந்த ட்விட்டை எதிர்த்தும் கம்பிரை சரமாரியாக விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.