Home விளையாட்டு மும்பை இந்தியன்ஸ் ( MI ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ( CSK )...

மும்பை இந்தியன்ஸ் ( MI ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ( CSK ) பற்றி மனம் திறந்த ஹர்பஜன் சிங்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், எனவே  தற்போது  தமிழ் மொழியில் ட்வீட் செய்கிறார் , கவிதை போடுகிறார் , சூப்பர் ஸ்டார் வசனங்கள் பதிவிடுகிறார்.

263
0

மும்பை இந்தியன்ஸ் ( MI ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ( CSK ) பற்றி மனம் திறந்த ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் மிகப் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் , சுழற் பந்து வீச்சாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், எனவே  தற்போது  தமிழ் மொழியில் ட்வீட் செய்கிறார் , கவிதை போடுகிறார் , சூப்பர் ஸ்டார் வசனங்கள் பதிவிடுகிறார் . மும்பை அணிக்கும் சுமார் 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

“ மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் நெடுநாட்கள் விளையாடியுள்ளேன் , அவர்கள் மிக ப்ரோபாஷனலாக இருப்பார்கள், நாமும் அப்படிதான் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் சூப்பர் கிங்ஸ் அணியில் அப்படி அல்ல, மீட்டிங்குகள்  நெருக்கடிகள் என எதுவும் கிடையாது. மேட்ச் நடக்கும் அன்றும் கூட மிக இயல்பாக தான் இருப்போம்.

MI ஐ பொறுத்தவரை வெற்றி பெற சொன்னால் வெற்றி பெற்றே ஆகவேண்டும். ஆனால் CSK அப்படி அல்ல. ஷான் வாட்சன் சென்ற தொடர் முழுவதும் சரியாக விளையாடவில்லை ஆனால் இறுதிப்போட்டியில் சதம் விளாசினார். இதைப்போல நன்றாக விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் . நான் இரு அணிகளுக்கு விளையாடியதிலும் மிகுந்த மகிழ்ச்சி.

என்னைக்கேட்டால் இந்திய அணியின் ரிஷப் பண்ட் தற்போது சில போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டாலும் அவருக்கு போட்டியை வெல்லும்படி விளையாட முடியும், அவருக்கு மேலும் அவகாசம் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

சா.ரா.

 

Previous articleஇந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் கூறும் பாகிஸ்தான் வீரர்
Next articleE-Gram சுவராஜ் அப்; வலுவான கிராமங்களே ஜனநாயகத்தின் தூண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here