Home விளையாட்டு ஆசிஷ் நெஹ்ரா; தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை

ஆசிஷ் நெஹ்ரா; தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை

267
0
ஆசிஷ் நெஹ்ரா

ஆசிஷ் நெஹ்ரா; தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை. இந்தியாவின் மூத்த வீரர் தோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரா?

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்‌எஸ் தோனி கடந்த உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா அணிக்கு திரும்பவில்லை. மேலும் தனது ஓய்வு பற்றியும் கூறவில்லை.

அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் சக விளையாட்டு வீரர்கள் யாரும் தோனி அணிக்கு திரும்பமாட்டார் என்றுதான் கூறி வருகின்றனர்.

இதுவே தற்போது ஒரு ட்ரெண்ட் ஆக சென்றுகொண்டு இருக்கிறது. தற்போது இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இதைப்பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது இந்தியாவின் விக்கெட் கீப்பர் என்றாலே தோனி தான். அவர் திடீரென்று அணிக்கு திரும்பி சர்ப்ரைஸ் கூட கொடுக்கலாம் யாருக்கு தெரியும்.

தோனி எப்பொழுதும் முடிவு எடுக்கும் விதமும் இது போல வித்தியாசமானதுதான். அதனால் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here