Home வரலாறு வங்கதேச வெற்றியை ஒரு ரன்னில் பறித்த இந்தியா

வங்கதேச வெற்றியை ஒரு ரன்னில் பறித்த இந்தியா

320
0

வங்கதேச அணியின் வெற்றியை கடைசி மூன்று பந்துகளில் பறித்த இந்திய அணி ரசிகர்களை பரபரப்பாக்கி வெற்றி பெற்றது

உலகக்கோப்பை போட்டி

2016 ஆம் ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.

மொத்தம் 10 நாடுகள் பங்கு பெற்ற இந்த உலக கோப்பையில் குரூப் 1 இல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா அணிகள் பங்கு பெற்றது

குரூப் 2வில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் விளையாடியது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் அதன்படி குரூப்-1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

குரூப் 2 வில் 4 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது மற்றும் ஒரு அணியில் இந்தியா ஆஸ்திரேலியா இதில் ஏதாவது ஒரு அணி தான் தகுதி பெற முடியும் என்ற நிலைமை இருந்தது.

இந்தியா-வங்கதேசம்

இந்தியா மார்ச் 23ஆம் தேதி வங்கதேசத்துடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் லீக் போட்டியில் மோதியது.

வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

வங்கதேச பந்துவீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை ரன் சேர்க்க விடாமல் தடுத்தார்கள்.

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியை பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா 30, ரோகித் சர்மா 18, தவான் 23, கோலி 24, தோனி 13 யுவராஜ் சிங் 3, பான்டியா 15, ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் அல்-அமீன், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ஹோம் மற்றும் முகமதுல்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

வங்கதேசம் வெற்றி விழும்பில்

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச வீரர்கள். இந்திய பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்து ஆடினார்கள்.

தமிம் இக்பால் 35, மிதுன் 1, ரகுமான் 26, ஷகிப் அல் ஹசன் 22, மோர்தசா 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

ஆட்டம் செல்ல செல்ல வங்கதேசம் கையிக்கு வெற்றி சென்றது. இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற அதிக சதவீதங்கள் இருந்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் வங்கதேச அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது அந்த ஓவரை வீச அன்றைய அனுபவம் இல்லாத இளம் வீரர் ஹர்திக் பாண்டியா வந்தார்.

முதல் பந்தை முகமதுல்லா ஒரு ரன் எடுக்க, இரண்டு மற்றும் மூன்றாவது பந்தை முஷ்பிக்குர் ரஹிம் பவுண்டரிக்கு விரட்டினார். விரட்டியதுமே முஷ்பிக்குர் ரஹிம் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.

இதன் மூலம் இந்த மூன்று பந்துகளில் 9 ரன்கள் எடுக்க பட்டது. மீதமுள்ள 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வங்கதேச அணி வெற்றி பெறும் என நிலைமை இருந்தது.

நம்பிக்கை இழந்த ரசிகர்கள்

சின்னசாமி மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் அனைவரும் வங்கதேசம் வெற்றி பெறும் என்று நினைத்து ஆரவாரத்தை குறைத்தார்கள்.

ஆனால் ஹர்திக் பாண்டியா விற்கு நம்பிக்கை இன்னும் தளர்ந்து போகவில்லை.

நான்காவது பந்தை ஹர்திக் பாண்டியா வீச முஸ்தபிசுர் ரஹிம் தூக்கி அடித்தார். ஆனால் அதை தவான் கேட்ச் பிடித்து முஸ்தபிசுர் ரஹீம் 11 ரன்களில் வெளியேற்றினார்.

அடுத்துச் சுவகோட்டா ஹோம் களமிறங்கினார். ஆனால் முகமதுல்லா ஐந்தாவது பந்தை எதிர்கொண்டார்.

அந்த பந்தை லெக் சைட் தூக்கி அடித்தார், ஜடேஜா அங்கு ஒரு அற்புதமான கேட்ச் பிடித்து முகமதுல்லாவை 18 ரன்னில் வெளியேற்றினார்.

இன்னும் வங்கதேச அணிக்கு ஒரு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. மீண்டும் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

ஒருவேளை ஆட்டத்தை சமம் செய்தாலே போதும் சூப்பர் ஓவரில் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள்.

தோனி கொடுத்த டிப்ஸ்

தோனி நீண்டநேரம் ஹர்திக் பாண்டியா விற்கு ஆலோசனை செய்துவிட்டு கீப்பிங் செய்யும் இடத்திற்கு சென்றார்.

ஒருவேளை பேட்ஸ்மேன் மட்டையில் படாமல் கீப்பரிடம் வந்துவிட்டால் ரன் அவுட் ஆக்க இடையூறாக இருக்குமென்று தோனி தான் அணிந்திருந்த கை உரையை கழற்றி வைத்தார்.

கடைசி பந்தை வீச ஹர்திக் பாண்டியா ஓடிவந்தார். அதை எதிர்கொண்ட ஹோம் மட்டையில் படாமல் ரன் எடுக்க ஓடினார். நேராக கீப்பரிடம் பந்து சென்றது.

ஆட்டத்தை டிரா செய்ய முஸ்தாபிகுர் ரகுமான் ஓடிவர தோனியும் பாய்ந்து வந்து ரன் அவுட் செய்தார்.

யுவராஜ் சிங் “அது விக்கெட்டு தான்” என்று சந்தோசத்தில் ஓட, தோனியும் கூடவே ஓடினார்.

நடுவரோ மூன்றாவது நடுவருக்கு சைகை செய்தார். ரசிகர்கள் மனதில் திக் திக் நிமிடமாக அமைந்தது.

இந்தியா வெற்றி

அந்த நொடி மூன்றாவது நடுவர் அதை ஆராய்ந்து பார்த்ததில் முஸ்தபிசுர் ரஹ்மான் ரன் ஏதும் எடுக்காமல் தன் விக்கெட்டை இழந்தார் என அறிவித்தார்.

அடுத்த கணமே மைதானம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் சத்தம் காதைப் பிளந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.

மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டார்கள்.

19.3 ஓவரில் வங்கதேசம் அணி வெற்றி பெறும் என்று டிவி பார்த்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் டிவியை ஆப் செய்தார்கள்.

சில துளிகள்

கடைசி மூன்று பந்தில் விக்கெட் வீழ்த்தி ஹர்திக் பாண்டியா எனும் நட்சத்திரம் உருவாக காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் வங்கதேசம் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஒரு ரன்னில் தோற்றது டி20 போட்டிகளில் இது நான்காவது முறையாகும்.

டி20 போட்டிகளில் கடைசி மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் இழந்தது. இந்த ஆட்டத்தில் நடந்ததே டி20 போட்டியில் முதல் முறையாகும்.

இந்த ஆட்டத்தில் தோனி தன்னுடைய டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்தார். ஆயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் ஆவார்.

4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மிகவும் பரபரப்பான டி20 போட்டிகளில் இதுவே முதன்மையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாத ஒன்று.

Previous articleஸ்மார்ட்டான தோற்றத்தில் தளபதி விஜய்: வைரலாகும் அந்த கண்ண பாத்தாக்கா லிரிக் வீடியோ!
Next articleLosliya: தமிழகத்தின் அழகு ராணியான லோஸ்லியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here